HomeCinemaமம்முட்டி நடிக்கும் ‘பிரமயுகம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மம்முட்டி நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

மம்முட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் ‘பிரமயுகம்.’ அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் த்ரில்லர் படங்களைத் தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் படமாக உருவாகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பன்மொழி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 17, 2023 அன்று தொடங்கி ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பிரமாண்டமாக நடந்தது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

அதையடுத்து பட வெளியீட்டுக்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கியுள்ளது. படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுதும் திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் மம்முட்டியின் தோற்றம் அடங்கிய போஸ்டர் செப்டம்பரில் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக, மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான ‘கண்ணூர் ஸ்காவ்ட்’ படம் வெற்றிப் பெற்றதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கியக் காரணமாக இருக்கிறது.

‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ இணைந்து இந்த படத்தை வழங்குகின்றன.

படக்குழு:-
தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ்.சஷிகாந்த்
தயாரிப்பு வடிவமைப்பு – ஜோதிஷ் ஷங்கர்
வசனம் – டி.டி.ராமகிருஷ்ணன்
ஒளிப்பதிவு – ஷேனாத் ஜலால்
இசை – கிறிஸ்டோ சேவியரிடர்
எடிட்டிங் – ஷஃபிக் முகமது அலி
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
ஆடை வடிவமைப்பு – மெல்வி ஜே

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this