HomeCinemaபகத் பாசில் நடிப்பில் '96' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

பகத் பாசில் நடிப்பில் ’96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி கே கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this