HomeCinemaநடிகர்கள் கார்த்தி, விஷால், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்க உற்சாகமாக நடந்த, கென் கருணாஸ் இயக்கி...

நடிகர்கள் கார்த்தி, விஷால், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்க உற்சாகமாக நடந்த, கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

Published on

கென் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்து இயக்குகிற திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் கார்த்தி, விஷால் , இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, டாக்டர் ஐசரி கே. கணேஷ், அருண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ் , பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்களான கருணாஸ் – கிரேஸ் கருணாஸ் தம்பதியின் வாரிசான கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘வாத்தி’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அவர் முதல் முறையாக கதையின் நாயகனாக நடிப்பதுடன் படத்தை இயக்குவதால் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதினை வென்ற ‘இசை அசுரன்’ ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்கிறார். தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுசின் பிரத்யேக உடை அலங்கார நிபுணரான காவ்யா ஸ்ரீராம் இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். பள்ளிக்கூட பின்னணியில் கலகலப்பான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் – காளி ராஜ்குமார் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this