HomeMovie Reviewஆர்யமாலா சினிமா விமர்சனம்

ஆர்யமாலா சினிமா விமர்சனம்

Published on

பருவம் கடந்தும் வயதுக்கு வராமல் மன உளைச்சலில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் அந்த பெண், தன் கனவில் வருகிற இளைஞனைக் காதலிக்கிறாள்.

கனவில் வந்தவன் ஒருநாள் நேரில் வருகிறான். அந்த ஊர் திருவிழாவில் நடக்கும் நாடகத்தில் கதாநாயகனாக மேடையேறி மக்களைக் கவர்கிறான்.

கனவில் வந்தவனை நேரில் பார்க்கும் அவள் உற்சாகமாகி அவனை நேசத்தோடு பார்க்க, அதில் மயங்கிய அவன் அவள் மீது காதல் கொள்ள…

இப்படி நகரும் கதையில், தான் பூப்பெய்தாததை நினைத்து அவள் அவனது காதலை ஏற்காமல் விலகுகிறாள். அதன்பின் இருவரும் அதிர்ச்சியான சில சம்பவங்களைச் சந்திக்கிறார்கள். அதையெல்லாம் கடந்து அவர்கள் மணவாழ்வில் இணைந்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இணை இயக்கம் ஆர் எஸ் விஜயபாலா

கதைநாயகியை மையப்படுத்திய கதை என்பதை புரிந்து அதற்கேற்ற உணர்வுகளை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் மனிஷா ஜித். தன் குறைகளை இஷ்ட தெய்வத்திடம் சொல்லி ஆறுதலடைவது, தெய்வம் நல்லதாக எதையுமே செய்யாத நிலையில் அந்த தெய்வத்தை அடித்து ஆத்திரத்தை தணித்துக் கொள்வது என நீளும் காட்சிகள் இளகிய மனம் கொண்டோரை கலங்கடிக்கும்.

நாயகன் ஆர் எஸ் கார்த்திக் கூத்துக் கலைஞனாக காத்தவராயன் வேடமிட்டு மேடையில் நடிக்கும்போது பொருத்தமான பங்களிப்பை தந்திருக்கிறார். நாயகி மீது காதல் வயப்படும்போது அதற்கேற்ப நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

கூத்து நாடக ‘ஜமா’வின் தலைவராக டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், நாயகியின் தாய்மாமனாக மாரிமுத்து என மற்றவர்களின் கச்சிதமான நடிப்பு, இதமான பாடல்கள், கதையோட்டத்தின் தேவையை நிறைவு செய்திருக்கிற பின்னணி இசை,  எளிமையான ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் பின்னிப் பிணைந்து வளமாகியிருக்கிறது கதைக்களம்.

வயதுக்கு வராத பெண்ணுக்கு காதல் வருவது என்ற கதை ஒரு விதத்தில் புதியதுதான் என்றாலும், திரைக்கதை தாறுமாறாக பயணித்திருப்பதால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறது.

Rating 2.5 / 5

Latest articles

ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

More like this