HomeMovie Reviewஅனோமி மலையாள (தமிழ் பதிப்பு) திரைப்பட விமர்சனம்

அனோமி மலையாள (தமிழ் பதிப்பு) திரைப்பட விமர்சனம்

Published on

தன் தம்பி தற்கொலை செய்துகொண்டதில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுகிற தடயவியல் நிபுணரான சாரா (பாவனா), காவல்துறை உயரதிகாரி ஒருவர் உதவியுடன் விசாரணையில் இறங்குகிறார். தம்பி மட்டுமல்ல, இன்னும் பலரும் மர்மமான முறையில் மரணித்திருக்க, என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதை கண்டறிகிறார். அது இப்படியெல்லாம்கூட நடக்குமா என்ற ஆச்சரிய அதிர்ச்சி தருகிறது. இயக்கம் ரியாஸ் மரத்

பாவனாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம். கெத்தாகவும் இருக்கிறார்; பாசமுள்ள சகோதரியாக மனம் கலங்குவதன் பிரதிபலிப்பை துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.

காவல்துறை உயரதிகாரியாக ரகுமான். நடிப்பில் வெளிப்படும் கம்பீரத்தில், புலனாய்வு விசாரணையில் காட்டுகிற தெளிவில் அனுபவ நடிப்பு தெரிகிறது.

டாக்டராக வருகிறவரின் சுயரூபம் மிரட்டுகிறது. பாவனாவின் காதலராக வருகிறவரும் அதிர வைக்கிறார். தம்பியாக வருகிறவரிலிருந்து மற்றவர்கள் கவனம் பெறத்தக்க நடிப்பைத் தந்திருகிறார்கள்.

மருத்துவத் துறை சார்ந்த கிரைம் திரில்லர் கதைக்களத்துக்கேற்ற சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, திரைக்கதையின் வேகத்துக்கேற்ற ஹர்ஷவர்தன் ராமேஸ்வரனின் பின்னணி இசை பய உணர்வைக் கூட்டுவதற்கு உதவியிருக்கின்றன.

புலனாய்வு விசாரணைகளில் விறுவிறுப்பு இருந்தாலும் புதிதாக இல்லையென்பதையும் படத்தின் நீளம் அதிகம் என்பதையும் குறையாக சொல்லலாம்.

வித்தியாசமான கிரைம் திரில்லர் கதைகள் உங்களுக்கு பிடிக்குமென்றால் அனோமி தருகிற அனுபவங்கள் அசத்தலாக இருக்கும். பாவனாவின் நடிப்புக்காகவும் பார்க்கலாம்.

Rating 3 / 5

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this