HomeMovie Reviewஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்

ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்

Published on

ரியோ ராஜுக்கு மற்றுமொரு வெற்றிப் படம்.

கல்யாணம் ஆகும்வரை ஒரு பெண் கட்டுக்கடங்காத சுதந்திரத்தோடு இருக்கலாம்; கல்யாணம் ஆனபின்னும் அப்படியே இருக்க நினைத்தால் அது மணவாழ்க்கையின் இனிமைக்கு ஆப்பு வைக்கும். அதை உணராமல் நடந்து கொள்கிற இந்த கதையின் நாயகி கணவனை எதிரியாக நினைத்து, டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போகிறாள்.

அதுவரை அவள் செய்த தவறுகளை பெரிதாக எடுத்துக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவன் மனம் மாறுகிறான்; அவளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறான். வீட்டில் எதிரிகளாக இருந்தவர்கள் கோர்ட்டில் எதிரும் புதிருமாக நிற்கிற சூழ்நிலை.

மனைவி விரும்பிய டைவர்ஸ் கிடைத்ததா, கணவன் எதிர்பார்த்தபடி மனைவியுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்ததா என்பது கதையின் மீதி…

மனைவி அத்துமீறும்போது கோபப்படுவது, அவளைப் பிரிகிற நிலை உருவாகும்போது வருந்துவது என கடந்தோடும் காட்சிகளில் ரியோ ராஜ் வெளிப்படுத்தியிருப்பது இதுவரை காணாத முதிர்ச்சியான நடிப்பு. காமெடி காட்சிகளிலும் பிய்த்து உதறியிருக்கிறார்.

பெமினிஸம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமல் மனம் போன போக்கில் நடந்துகொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிற கேரக்டருக்கு பொருத்தமான திமிர்த்தனத்தை தனது நடிப்பில் தந்து கோபம், வருத்தம், அழுகை என மற்ற உணர்வுகளை சரியானபடி பிரதிபலித்திருக்கிறார் ரியோவுடன் இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிற மாளவிகா மனோஜ்.

டைவர்ஸ் விவகாரத்தில் ரியோவின் வழக்கறிஞராக வருகிற விக்னேஷ் காந்த் வழக்கில் ஜெயிப்பதற்காக எடுத்துக்கொள்கிற முயற்சிகள் ரசிக்கும்படியும் சட்டத்தை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதை விளக்குவது ஆச்சரியப்படுத்தும்படி இருக்கிறது. அவரை எதிர்த்து வாதாடுகிற ஷீலாவின் நடிப்பில் பரவாயில்லை ரக கெத்து வெளிப்படுகிறது. டைவர்ஸ் கேஸை எடுத்து நடத்துகிற விக்னேஷ் காந்தும் ஷீலாவும் கதைப்படி டைவர்ஸான கணவன் மனைவி. அதனால் அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ளும் முறை படு சுவாரஸ்யமாக இருக்கிறது.

விக்னேஷ்காந்துடன் பணியாற்றுகிற ஜூனியர் அட்வகேட்டாக ஜென்சன் திவாகர். அவர் வருகிற அத்தனை காட்சிகளுமே குபீர் சிரிப்புக்கு கேரண்டி. அதிலும் அவர் தங்களை பின் தொடர்ந்து கண்காணிக்க நியமிக்கப்பட்ட நபரை அணுகும்விதம் ரகளையோ ரகளை. மற்றவர்களின் நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது.

பின்னணி இசை மூலம் காட்சிகளின் உணர்வுகளுக்கு உயிரோட்டம் தந்து, பாடல்களை இதமாகவும் உற்சாகமாகவும் வழங்கியிருக்கிறார் சித்துகுமார். ர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு தரம்.

சுதந்திரம், பெமினிசம் என்பதற்கான அளவுகோல் என்ன என்பதை விளக்கி, பெண்களால் ஆண்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவது படத்தின் நோக்கம். அந்த நோக்கம் சரியானது; அதற்காக உருவாக்கப்பட்ட கதை சீரியஸானது. அப்படியொரு சீரியஸான கதையை திரைக்கதை மூலம் காமெடி விருந்தாகியிருப்பதால் தியேட்டர்கள் ரசிகர்களின் சிரிப்பலையில் மிதப்பதை பார்க்க முடிகிறது.

Rating 3.5 / 5 

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this