HomeCinemaகதைநாயகனாக காளிவெங்கட் நடிக்கும் 'அப்பனே முருகா' படப்பிடிப்பு துவங்கியது!

கதைநாயகனாக காளிவெங்கட் நடிக்கும் ‘அப்பனே முருகா’ படப்பிடிப்பு துவங்கியது!

Published on

காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்க, ராசு மதுரவனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய குரு ராமசாமி இயக்கும் முதல் படம் ‘அப்பனே முருகா.’

படத்தில் சித்தப்பு சரவணன், எம்.எஸ் பாஸ்கர், முனீஸ்காந்த், மதுமிதா, கர்ணன் ஜானகி, சூப்பர்குட் சுப்பிரமணி, மோகனசுந்தரம், டாணாக்காரன் புதுவை பூபாலன்ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘ட்ரூ டீம் என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர்.சதீஷ் தங்கம், ஆர் ஜி சேகர் மற்றும் சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். சர்வதேச விருதுகள் பலவற்றை வென்ற ‘கிடா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜெயபிரகாஷ் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்,

அப்பன் தோற்ற ஊரில் பிள்ளைகள் ஜெயிக்க முடியாது என்று ஒரு பழமொழி சொல்லப்படுவது உண்டு. ஆனால் அப்படி தனது ஊரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்ற ஒருவன் அதிலிருந்து மீண்டு வாழ்க்கையில் ஜெயித்தானா, அவனது பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆச்சு என்பதை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. அடுத்து அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, கேரளா ஆகிய பகுதிகளில் நடைபெறவிருக்கிறது

படம் பற்றி இயக்குநர் குரு ராமசாமியிடம் கேட்டபோது, ”இன்று பலகுடும்பங்கள் இந்த ஆன்லைன் ரம்மியால் தெருவிற்கு வந்துவிடுகின்றன. கண்ணுக்குத் தெரியாமல் பல குடும்பங்கள் சிதைந்து போகின்றன. நேசமும் பாசமும் தொலைந்து போகின்றன. இந்த வலை அவ்வளவு எளிதாகப் பின்னப்படுகிறது ஆசை வார்த்தைகளால். விழுந்த பின்பு வெளியேற இயலாத மாய வலை இது. இதை செண்டிமெண்ட் நகைச்சுவை கலந்து தருகிறோம்.” என்றார்.

படக்குழு:-

படத்தொகுப்பு: ராமர்
சண்டைப் பயிற்சி: இளங்கோ
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்

Latest articles

‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது! -ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் 'எல்லம்மா' திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த...

ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது!

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும்...

சத்ய தேவ் நடிக்கும்  ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை...

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் (SLV Cinemas) தயாரிப்பில் உருவாகும்...

More like this