HomeCinemaரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘அனிமல்' படத்திலிருந்து அன்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் ‘போகாதே...'...

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘அனிமல்’ படத்திலிருந்து அன்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் ‘போகாதே…’ பாடல் வெளியீடு!

Published on

மனித உணர்வுகளின் பல்வேறு அம்சங்களை ஆராய்வதன் வழியே, பார்வையாளர்களை பரபரப்பான சவாரிக்கு அழைத்துச் செல்லும் விதத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் ஆகியோரின் நடிப்பில் க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘அனிமல்.’

இந்த படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

அன்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் இந்த போகாதே பாடல் திருமணத்திற்கு பிறகான உறவின் சிக்கல்களை அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது.

பாடகர் கார்த்திக் குரலில் வெளிவந்திருக்கும் ‘போகாதே’ பாடல், அனிமல் படத்தில் நடித்திருக்கும் அட்டகாசமான ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதலை, அதன் வலியை, சிக்கல்களை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

ஸ்ரேயாஸ் பூரணிக் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள ‘போகாதே’, காதலின் சிக்கலான அம்சங்களை அழகாக வெளிப்படுத்துகிறது. அனிமல் திரைப்படம் மனித ஆளுமையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு மனிதன் ஆதி குணமான விலங்கின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது மற்றும் பிரதான சினிமாவின் வழக்கமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தமான புதிய வகையிலான அனுபவத்தைப் பார்வையாளனுக்கு வழங்கவுள்ளது.

இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் 1 டிசம்பர் 2023 அன்று வெளியாகிறது.

படத்தை பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this