HomeCinemaவிமர்சனங்களில் அங்கீகாரம் பெறும் அஞ்சாமை பட இயக்குநரை பாராட்டும் விதார்த்!

விமர்சனங்களில் அங்கீகாரம் பெறும் அஞ்சாமை பட இயக்குநரை பாராட்டும் விதார்த்!

Published on

ரஹ்மான், விதார்த், வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை வாரி குவித்து வரும் படம் ‘அஞ்சாமை.’ நீட் தேர்வினாலும், தேர்வின் போது மாணவ மாணவிகள் அனுபவித்த தாங்கமுடியாத மன உளச்சலையும், அதனால் அவர்களது குடும்பத்தார் நேரிடும் துயரங்களை மையப் படுத்தி இப்படத்தை இயக்கி உள்ளார் புது முக இயக்குனர் S.P. சுப்பு ராமன். இவர் பிரபல இயக்குனர்களானஎன். லிங்குசாமி , மோகன் ராஜா ஆகியோரது ஹிட் படங்களுக்கு உதவியாளராக பணியாற்றிய அனுபவசாலி.

‘அஞ்சாமை’ படத்தில் மாணிக்கம் பெயரில் இன்ஸ்பெக்டராகவும், வக்கீலாகவும் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள ரஹ்மானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தற்போது கேரளாவில் ஓமர் லூலு இயக்கத்தில் ‘பேட் பாய்ஸ்’ (Bad Boyz) படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ள ரகுமான், இந்த பாராட்டுகள் எல்லாம் இயக்குனரையே சாரும் என்று அவரது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார் .

மேலும் அவர் அவர், ‘அஞ்சாமை’ படத்தின் கதையை கேட்ட நாளிலேயே அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டது. படத்துக்கும் எனக்கும் பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த பாராட்டுகள் அனைத்தும் இயக்குனர் எஸ்.பி. சுப்பு ராமனையே சாறும். இப்படி விவாதம் நிறைந்த சர்ச்சைக்குரிய ஒரு கதை தேர்வு செய்து படமாக்கிய அவரது துணிச்சலுக்கும், தைரியத்துக்கும் என் பாராட்டுக்கள். இப்படி அருமையான ஒரு கதையில் நான் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this