HomeCinemaவெளியானது, விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! வெளியாகிறது விரைவில் சிங்கிள் ட்ராக்.

வெளியானது, விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! வெளியாகிறது விரைவில் சிங்கிள் ட்ராக்.

Published on

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதை நாயகனாக நடிக்க, ஆறுமுக குமார் இயக்கியுள்ள ‘ஏஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் விஜய் சேதுபதியின் இளமையானத் தோற்றம் + புகை பிடிக்கும் குழாய் + தாயக்கட்டை என பல சுவாரஸ்யமான விசயங்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. டைட்டிலுக்கான டீசரில் படத்தில் தோன்றும் முன்னணி  நட்சத்திர கலைஞர்களின் அறிமுகமும், பின்னணி இசையும், விஜய் சேதுபதியின் திரை தோன்றலும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.
டீசரில் சூதாட்டம்,  துப்பாக்கி, குண்டு வெடிப்பு,  கொள்ளை, பைக் சேசிங் …போன்றவை இருந்தாலும், யோகி பாபுவின் ரியாக்ஷன் சிறப்பாக இருப்பதாலும்  இந்த திரைப்படம் கிரைம் வித் காமெடி திரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த டீசரில் அனிமேஷன் பாணியில் கதாபாத்திரங்கள் அறிமுகமாவதும், அதற்கு ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் ‘ஏஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌
விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில் வெளியாகும் இரண்டாவது படம் இது என்பதால் ‘ஏஸ்’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் அதிகரித்திருக்கிறது.
கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் கவனித்திருக்கிறார். கமர்சியல் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs  என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

Latest articles

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

More like this