HomeGeneralபிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த...

பிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புதிய பயணம்!

Published on

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் பயணித்து வரும் இளம் நடிகர் அஜித் விக்னேஷ், தற்போது வெளியாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அவர், கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறார். குறிப்பாக, திரையில் அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
மதுரையைச் சேர்ந்த அஜித் விக்னேஷுக்கு கல்லூரிப் பருவத்தில் இருந்தே சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர், தனது சினிமா கனவை நனவாக்குவதற்காகத் திரைத்துறையில் பயணிக்கத் தொடங்கினார். நடிப்புடன் சிலம்பம், பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளிலும் பயிற்சி பெற்றதுடன், நடிப்புப் பயிற்சியையும் முறையாக மேற்கொண்டார். தொடக்கத்தில் கிடைத்த சிறிய வாய்ப்புகளையும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு, தனது திறமையை நிரூபிக்கத் தொடர்ந்து முயற்சி செய்தார். இதன் தொடர்ச்சியாக இதுவரை 40 முதல் 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார்.
குறும்படங்களில் தனது நடிப்புத் திறனை வளர்த்துக்கொண்ட அஜித் விக்னேஷுக்கு, விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகர் விவேக் அவர்கள் மூலமாகக் கிடைத்த அந்த வாய்ப்பு, அவரது திரைப்பயணத்தில் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அஜித் விக்னேஷின் நடிப்பைப் பார்த்துப் பாராட்டிய விவேக், அவருக்குப் ‘பிகில்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளார். தொடர்ந்து ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையத் தொடரிலும் நடித்த அவர், தற்போது ‘பிளாக் கோல்ட்’ திரைப்படத்தின் மூலம் வலுவான கதாபாத்திரத்தில் தனது இருப்பைப் பதிவு செய்துள்ளார். ‘பிகில்’ படத்தில் அவரது நடிப்பைப் பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறனின் வார்த்தைகளும் தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்ததாகக் கூறுகிறார்.
தனது திரைப்பயணம் குறித்து அஜித் விக்னேஷ் கூறுகையில், “கல்லூரிப் பருவத்தில் இருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதற்காகத்தான் சென்னைக்கு வந்தேன். திரைத்துறையில் ஆரம்பத்தில் சிறிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு மறைந்த நடிகர் விவேக் சார் மூலமாக ‘பிகில்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நடிப்பைப் பார்த்துப் பாராட்டி அந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். அந்தப் படத்தில் எனது நடிப்பை வெற்றிமாறன் சார் பாராட்டியதும் மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. ‘பிகில்’ படத்தில் தொடங்கிய எனது திரைப்பயணம், ‘தமிழ் ராக்கர்ஸ்’ தொடரைத் தொடர்ந்து இப்போது ‘பிளாக் கோல்ட்’ படத்தின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. பலரும் என்னைப் பார்த்து அடையாளம் கண்டு பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.
மேலும், “திரைத்துறையில் இன்னும் பல சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து எனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தற்போது கதாநாயகனாக இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அந்தப் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ப என்னைத் தயார்படுத்திக்கொண்டு நடிக்கத் தயாராக இருக்கிறேன். நல்ல கதைகளையும், சவாலான கதாபாத்திரங்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
குறும்படங்களில் தொடங்கி, ‘பிகில்’, ‘தமிழ் ராக்கர்ஸ்’, ‘பிளாக் கோல்டு’ எனப் படிப்படியாகத் தனது பயணத்தை விரிவுபடுத்தி வரும் அஜித் விக்னேஷ், தற்போது கதாநாயகனாகவும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகியுள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்துள்ள இவர், அடுத்ததாக ஹீரோவாக எந்த மாதிரியான கதைகளில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தனது விடாமுயற்சியாலும் நடிப்புத் திறமையாலும் திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடிக்கப் பயணிக்கும் அஜித் விக்னேஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

Latest articles

கோந்தல் சினிமா விமர்சனம்

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர்...

ஃபிளாக் சினிமா விமர்சனம்

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன். அப்படியென்ன தாத்தாவின் கனவு? டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான...

More like this

கோந்தல் சினிமா விமர்சனம்

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர்...

ஃபிளாக் சினிமா விமர்சனம்

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன். அப்படியென்ன தாத்தாவின் கனவு? டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...