HomeCinemaதிரைப் பிரபலங்கள் 40 பேர் வெளியிட்ட, ஷாம் நடிக்கும் 'அஸ்திரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

திரைப் பிரபலங்கள் 40 பேர் வெளியிட்ட, ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

ஷாம் கதாநாயகனாக நடிக்க, கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ள படத்திற்கு ‘அஸ்திரம்’ என பெயரிட்டுள்ளனர்.

இந்த பட்த்தில் கதாநாயகியாக மாடலிங் துறையைச் சேர்ந்த நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நடிகர் ஷாம் மீது கொண்ட நட்பின் காரணமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் ஆர்யா, சுதீப், சாயேஷா, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வம்சி உள்ளிட்ட பலர் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டனர். அவர்களுடன் இணைந்து, இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் மீது கொண்ட நட்பினால் நாற்பதுக்கும் மேற்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் தங்கள் அஸ்திரத்தின் முதல் பார்வையை தங்கள் வலைத்தளங்களில் பதிவுசெய்துள்ளனர்.

கடந்த பத்து வருடங்களாக குறும்படங்களில் நடித்து, பின்னர் ‘என் பெயர் ஆனந்தன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் இப்படத்தின் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.

படம் குறித்து இயக்குநர் பேசியபோது, “கொரோனா காலகட்டத்தில் 30 நிமிடம் கொண்ட ஒரு பைலட் ஃபிலிம் ஆக இதை உருவாக்கும் வேலைகளில் இறங்கினோம். கதை நன்றாக இருக்கவே இதை திரைப்படமாக மாற்ற முடிவு செய்தோம். இதன் கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். இந்த படம் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ளது.

நடிகர் ஷாம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ பாணியில் இந்தப் படமும் விறுவிறுப்பான துப்பறியும் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் கதையை சொல்வதற்காக நடிகர் ஷாமை சோசியல் மீடியா மூலமாக மெசேஜ் அனுப்பி தொடர்பு கொண்டேன். என்னை யார் என்றே தெரியாத நிலையில் என்னுடைய பேச்சிலேயே நம்பிக்கை வைத்து என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்து கதை கேட்டு உடனேயே நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்தார்.

தனக்கு இந்த படம் வெற்றிகரமான ரீ எண்ட்ரி கொடுக்கும் படமாக இருக்கும் என அவர் நம்புவதால் கூடுதல் அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்.

கொடைக்கானல் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விவரங்களை தெரிவிக்கிறோம்” என்றார்.

இந்த படத்திற்கு ‘ஐரா’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி ‘அஸ்திரம்’ படத்திற்கு இசையமைக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள ‘ரேஞ்சர்’, ‘ஜாக்சன் துரை 2’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,

‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப்போற்று’ படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இப்படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டைப் பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...