HomeGeneralஅறிவு படக்குழுவின் மனிதநேயம்.. பள்ளியை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார்!

அறிவு படக்குழுவின் மனிதநேயம்.. பள்ளியை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார்!

Published on

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் ‘அறிவு’ திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, அந்த பள்ளியில் மாணவர்களுக்கான போதிய  வசதிகள் இல்லாத நிலையை கண்டு படத்தின் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார்.
அதன்படி, பள்ளி முழுவதும் புதிய பெயிண்டிங் வேலைகள் செய்யப்பட்டதுடன், மறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட இந்த உதவி, படக்குழுவின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
இந்த  திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே பெண் உரிமைகளை மையமாகக் கொண்ட வலுவான சமூகக் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மூணாறு பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தேனி பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ஐ எம் விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான  சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர்.
மூணாறு பகுதிகளில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு தேனியில் இரண்டாம் கட்டப்படிப்பு நடந்து வருகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னதாக படப்பிடிப்பை முழுமையாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.  சமூகச் செய்தியையும் விறுவிறுப்பையும் இணைக்கும் இப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மனிதநேய செயல்களுடன் முன்னேறும் இந்த திரைப்படம், திரையுலகில் மட்டுமின்றி சமூகத்திலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தினை Movietron Production சார்பில் தயாரிப்பாளர்   சாய்வினோத் ஜெயக்குமார் பெரும் பொருட்செலவில் தரமான படைப்பாக உருவாக்கி வருகிறார் இணைத் தயாரிப்பாளர் சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார்.  இசையமைப்பாளர் D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K., கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு em பணியாற்றுகின்றனர்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this