HomeCinemaபொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த 'அறுவடை' படக்குழு!

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அறுவடை’ படக்குழு!

Published on

எம். கார்த்திகேசன் இயக்கி கதைநாயகனாக நடிக்கும் அறுவடை திரைப்படத்தின் படப்பிடிப்பு அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடி நிறைவுக்கு வந்துள்ளது.

படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ், முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன், மற்ற வேடங்களில் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள்.

கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் இந்த படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு ‘அறுவடை’ என பெயரிட்டிருக்கிறோம். விரைவில் படத்தை வெளியிட உள்ளோம்” என்றார்.

ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை , படத்தொகுப்பு – கே .கே . விக்னேஷ். பாடல்கள் – கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this