HomeCinemaகாட்டு மிருகங்களைவிட மோசமான லால் சேட்டாவிடம் மாட்டிக்கொள்ளும் பத்து வயதுக் குழந்தை... பரபரப்பான கதையில் உருவான...

காட்டு மிருகங்களைவிட மோசமான லால் சேட்டாவிடம் மாட்டிக்கொள்ளும் பத்து வயதுக் குழந்தை… பரபரப்பான கதையில் உருவான அனலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே பாபு வெளியிட்டனர்!

Published on

சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி.’ இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை  தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த  இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டாடா, கராத்தே பாபு படங்களின் இயக்குநர் கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர்.

இயக்குனர் தினேஷ் தீனா படத்தை பற்றி பேசியபோது, “இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. காட்டு மிருகங்களை விட மிகவும் மோசமானவன் மனிதன் அதில் மிகவும் முக்கியமானவன் இந்த லால் சேட்டா. ஜான்சி தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி எப்படி இதை முடிவுக்கு கொண்டு வருகிறாள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம் தான் இந்த அனலி” என்றார்.

இந்திய சினிமா  வரலாற்றில் முதல் முறையாக பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில்  மிக பிரமாண்டமான செட் அமைத்து படம் பிடிக்க முழு சுதந்திரம் அளித்து படத்தின் தரத்தை  சர்வதேச அளவில்  உயர்த்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சிந்தியா லூர்டே.

படத்தில் சைந்தவியின் அழகிய குரலில் ஓர் மழைத்துளியும் என்ற பாடல் மற்றும்  அ.பா. ராஜாவின் வரிகளில் வில்லன் பாடல் குஜிலி கும்பா என்ற பாடலும் மிக அருமையாக வந்துள்ளது.

விரைவில் பாடல்கள், டிரெய்லர் வெளியாகவுள்ளது. படமும் மிக விரைவில்  வெளியாகவிருக்கிறது.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this