HomeCinemaமேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி 'ஆக்காட்டி' படத்திற்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அங்கீகாரம்!

மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி ‘ஆக்காட்டி’ படத்திற்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அங்கீகாரம்!

Published on

ஆக்காட்டி திரைப்படம் 56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில்  WAVES Film Bazaar பிரிவின் கீழ் சிறந்த திரைப்பட அடையாள விருதை  பெற்றுள்ளது. படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.

தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட  இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.

ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் முல்லையரசி , சிறுவனாக சுபாஷ் ஆகியோர் கதையின் மாந்தர்களாக நடித்து உள்ளனர்.

ஆக்காட்டி திரைப்படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிஞர் கார்த்திக் நேத்தா இரு பாடல்களை எழுதியுள்ளார்.

மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்ப பட்டிருக்கும் ஆக்காட்டி திரைப்படம், விரைவில் நற்செய்தியுடன் முதல் பார்வையை வெளியிடும் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் எஸ் இ எசக்கி ராஜா ஒளிப்பதிவாளர், ராம் குமார் எடிட்டர், தீபன் சக்ரவர்த்தி இசையமைப்பாளர், ஆர்ட் டைரக்டர் மனோஜ் குமார்,நேரடி ஒலி வடிவமைப்பாளர் பாலா ஜீவ ரத்தினம்,சுகுமார் சண்முகம் காஸ்டிங் இயக்குநராகவும், சேகர் முருகன் சி ஜி கலை இயக்குநராகவும், டைட்டீல் ஸ்டோரிபோர்ட சந்திரன், டிரெய்லர் & புரமோஷன் எடிட்டிங் பிரேம் பி,கலரிஸ்ட் ரத்தன் மற்றும் படத்தின் ஒலி வடிவமைப்பை பெப்பிள்ஸ் ஸ்டூடியோ  ஹரி பிரசாத் எம் ஏ மேற்கொண்டுள்ளார்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this