HomeCinema'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்திலிருந்து மைலி சைரஸின் 'ட்ரீம் ஆஸ் ஒன்...' அசல் பாடல்...

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்திலிருந்து மைலி சைரஸின் ‘ட்ரீம் ஆஸ் ஒன்…’ அசல் பாடல் வெளியானது!

Published on

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் ஆஸ் ஒன் பாடலை மைலி சைரஸ் வெளியிட்டார். மனதை வருடும் இந்தப் பாடலின் கிளிம்ப்ஸை தனது சமூக ஊடக தளங்களில் மைலி சைரஸ் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து மைலி பகிர்ந்திருப்பதாவது, “இந்தப் பாடலை மார்க் ரான்சன் மற்றும் ஆண்ட்ரூ வயட் ஆகியோருடன் இணைந்து உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு பாடல் வரியும் நாம் எங்கிருந்தோம் என்பதையும், நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் பிரதிபலிக்கிறது. நம் அனைவருக்கும் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்பதற்கான நம்பிக்கையை இந்தப் பாடல் வைத்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் மிகவும் உணர்வுப்பூர்வமாக இணைந்த ஒரு படத்திற்காக அர்த்தமுள்ள பாடல் ஒன்றை எழுதியது மகிழ்ச்சி” என்றார்.

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், மரைன் நவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நவி போர்வீரன் நெய்திரி (சோ சால்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் புதிய சாகசத்திற்கு பார்வையாளர்களை பண்டோராவுக்கு அழைத்துச் செல்கிறார். ஜேம்ஸ் கேமரூன் & ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் ஆகியோரின் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன் & ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் & ஜோஷ் ஃப்ரீட்மேன் & ஷேன் சலெர்னோவின் கதையையும் கொண்ட இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா நிறுவனம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this