HomeCinemaபிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்.'

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்.’

Published on

புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையின் தழுவலே ‘அங்கம்மாள்’ திரைப்படம். இதுபற்றி பெருமாள் முருகன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படத்தின் கதை என்னுடையது என்றாலும் இதற்கான தழுவல் உரிமையை கொடுத்ததோடு என் பங்கு முடிந்துவிட்டது. இதன் பிறகு, இந்தக் கதையை முழுமையாகப் புரிந்து கொண்டு படமாகக் கொண்டு வந்ததில்தான் இயக்குநரின் திறமை உள்ளது.

சிறுகதை சினிமாவாக மாறும்போது அதில் பல விஷயங்கள் மாறலாம். குறிப்பாக இந்தக் கதையில் கிளைமாக்ஸ் மற்றும் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துவதை சொல்லலாம். 25 நிமிடங்கள் நீளம் கொண்டு குறும்படத்திற்கான கதையை முழுநீள படமாக நேர்த்தியுடனும் ஆழத்துடனும் இயக்குநர் மாற்றியிருக்கிறார்” என்றார்.

பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதை தீவிரத்துடனும் ஆழமான உணர்வுகளுடனும் படமாக்கப்பட்டுள்ளது. முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார். இவருடன் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு அஞ்சோய் சாமுவேலின் ஒளிப்பதிவும் முகமது மக்பூல் மன்சூரின் இசையும் படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளது.

திரைத்துறையில் நல்ல படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற நிறுவனமான ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை வழங்குகிறது. தனது முதல் படமான ‘Ave Maria’ மூலம் பாராட்டப்பட்ட விபின் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, ‘அங்கம்மாள்’ படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை எஸ். கார்த்திகேயன், பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சோய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this