HomeMovie Reviewஅந்த 7 நாட்கள் சினிமா விமர்சனம்

அந்த 7 நாட்கள் சினிமா விமர்சனம்

Published on

உயிருக்கு உயிரான காதலியின் உயிர் பிரியும் நாள் எது என்பதை தெரிந்து கொள்ளும் காதலன் அவளைக் காப்பாற்ற போராடுகிற கதை.

வானியல் ஆராய்ச்சியில் ஈடுபடுகிற நாயகன் அஜிதேஜுக்கு சூரிய கிரகண நாளில் ஒருவித விசேச கக்தி கிடைக்கிறது. அதிலிருந்து, அவர் யாருடைய கண்களை பார்க்கிறாரோ அவருடைய மரண நாள் தெரிந்து விடும். அதன்படியே அவர்கள் மரணமடைகிறார்கள். அதேபோல் அவனுக்கு தன் காதலி இன்னும் ஏழு நாட்களில் இறந்து விடுவாள் என்பது தெரிகிறது. மனம் உடைந்துபோகும் காதலன் அவளைக் காப்பாற்ற ‘அந்த 7 நாட்கள்’ படும்பாடுதான் படத்தின் கதை…

காதல் வயப்படும்போது உற்சாகமாக, காதலியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளில் பயம் பதற்றம் சூழ்ந்தவராக நடிப்பில் தன் கடமையை பொருத்தமாக செய்திருக்கிறார் நாயகன் அஜிதேஜ்.

நாயகி ஸ்ரீஸ்வேதா காதல் காட்சிகளில் மனதைக் கவரும்படியும் உயிருக்குப் போராடும்போது மனம் கலங்கும் விதத்திலும் நடித்திருக்கிறார்.

இயக்குநர் கே பாக்யராஜுக்கு அவர் இயக்கிய அந்த 7 நாட்கள் படம் கொடுத்த அங்கீகாரம் மிகப் பெரியது. அவரது படத்தின் தலைப்பை சுமந்துள்ள இந்த படத்தில் அவர் அமைச்சராக நடித்து தனது கேரக்டரை கவனிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகனின் அப்பாவாக நமோ நாராயணன், வழக்கறிஞராக வருகிற சுபாஷினி கண்ணன், கதாநாயகியின் தந்தையாக காவல்துறை உயரதிகாரியாக வருகிறவர் என மற்றவர்கள் கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

படத்தின் விறுவிறுப்பான காட்சிகளை சுறுசுறுப்பாக்க சச்சின் சுந்தரின் பின்னணி இசையும் கதை நடக்கும் கொடைக்கானலின் அழகை ரசிக்க கோபிநாத் துரையின் ஒளிப்பதிவும் உதவியிருக்கிறது.

வழக்கமான காதலோடு வானியல் ஆராய்ச்சி, சூரிய கிரகணம் என இடைவேளை வரை அறிவியலை பிடித்துக் கொண்டு நகரும் கதை, இடைவேளைக்குப் பிறகு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற ஹீரோயினை சுற்றிச் சுழலும்போது அடுத்து என்ன நடக்கும் ஏது நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி வித்தியாச அனுபவம் தருகிறது.

Rating 3.5 / 5

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this