HomeCinemaதனித்துவமான சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘அதீரா’ படப்பிடிப்பு...

தனித்துவமான சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘அதீரா’ படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

Published on

தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார்.

டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, இப்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இதில், கல்யாண் தாசரி ஹீரோவாக தனது பிரம்மாண்ட அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு, முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த புதிய திரைப்படத்தை ஷரண் கோப்பிசெட்டி இயக்குகிறார்.

இந்திய இதிகாசங்களின் சாரத்தை கொண்டும், நவீன திரைத்திறனுடன் இணைந்தும் உருவாகும் அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும். இந்த யுனிவர்ஸின் ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான பின்புலம், காட்சியமைப்பு, மற்றும் மிகப்பெரிய கதைக்களம் கொண்டதாக இருக்கும். ஆனாலும் அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு முழுமையான சூப்பர்ஹீரோ யுனிவர்ஸாக விரிகின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது.

போஸ்டரில் ஒரு மாபெரும் எரிமலை வெடித்து, தீக்கங்குகளை வெளிப்படுத்துகிறது. ஆகாயம் முழுவதும் புகை மற்றும் சாம்பலால் மூடப்படுகிறது. அந்தக் குழப்பத்திலிருந்து, எஸ்.ஜே.சூர்யா, காளை போன்ற கொம்புகளுடன், பழங்குடி போர்வீரர் தோற்றத்தில், கொடூரமான அசுரனாக எழுகிறார். அவருக்கு முன், கல்யாண் தாசரி சூப்பர் ஹீரோ வேடத்தில், நவீன போர்க்கவசம் அணிந்து, தன்னம்பிக்கையுடன் மண்டியிட்டு எழுந்து நிற்கிறார். இந்த காட்சி, ஒரு அபாரமான ஹீரோ–வில்லன் மோதலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

நம்பிக்கை vs இருள் எனும் இந்த மாபெரும் போராட்டத்தில், அதீரா தனது மின்னல் சக்திகளை வெளிப்படுத்தி, தர்மத்தைக் காப்பாற்றுகிறார். எரிமலை போல வெடிக்கும் அதீரா, பார்வையாளர்களின் உணர்ச்சிகளை திரையரங்கில் கவரப்போகிறார். அதிரடி சண்டைகள், மூச்சுத் திணற வைக்கும் காட்சிகள், மற்றும் பரபரப்பான டிராமா—இவை அனைத்தும் “மின்னல் முழக்கம்” போல உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

பிரசாந்த் வர்மாவுடன் ஹனுமான் படத்தில் பணியாற்றிய ஷிவேந்திரா கேமரா பொறுப்பை ஏற்றுள்ளார். பின்னணி இசையில் சிறப்பான திறமைகொண்ட ஸ்ரீ சரண் பகாலா இசையமைக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா புரொடக்‌ஷன் டிசைன் கவனிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளனர்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this