HomeCinemaகே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ள 'அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ள ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்

Published on

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி _ ஜீவிதா நடிப்பில் உருவான ‘அடியே வெள்ளழகி’ பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள். இதுவரை கலையுலகம் காணாத பிரமாண்ட புதுமை இது.

கட்டெறும்பு சேனலில் இந்த பாடல் வெளியாகியுள்ளது. பாடலை கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், சற்குணம், மோகன் ஜி, சரவண சக்தி,திருமலை, மஞ்சுதிவாகர், திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ்,எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி,நடிகர்கள் விதார்த், விமல், அமுதவாணன், மதுரை காளையன், அப்புக்குட்டி, அங்காடித்தெரு மகேஷ், விஜய்விஸ்வா, ஸ்ரீபதி, சங்கர பாண்டியன்,டாக்டர் சரவணன், அங்கயற்கண்ணன், அஜய்வாண்டையார், ஜித்தன் ரமேஷ்,ரமணா, கலை, காதல் சுகுமார், ஆறுபாலா,
இயக்குநர் ஒளிப்பதிவாளர் ஜீவன், பாடகர் கலைமாமணி வேல்முருகன்,இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் மோகன்டச்சு, பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், நடிகைகள் தேவிகா வேணு, தியா, மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப் பிரபலங்கள் பாடலை பார்த்து பாராட்டி, பாடலின் முதல் பார்வையை வலைதளத்தில் வெளியிட்டனர்.

பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். இவர், பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கே.சி.பிரபாத்தின் மகன்.

மிதுன் சக்கரவர்த்தி, இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இப்போது இயக்குநர் குகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து உள்ளார். இயக்குநர் சிவாஜி இயக்கத்தில் உருவாகும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பதில் மிதுன் சக்கரவர்த்திக்குச் சிறு வயது முதல் மிகுந்த ஆர்வம் உண்டு. இவர் இப்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி., விஸ்காம் படித்து வருகிறார். படித்து முடித்தவுடன் முழுமூச்சாக சினிமா தயாரிப்பையும்,சினிமா நடிப்பையும் கவனிப்பார் என்கிறார் அவரின் தந்தை கேசி பிரபாத்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this