HomeCinemaகாட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு... வெற்றிப்பாதையில் உதயா நடித்த 'அக்யூஸ்ட்.'

காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு… வெற்றிப்பாதையில் உதயா நடித்த ‘அக்யூஸ்ட்.’

Published on

உதயா நடித்த ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இதன் காரணமாக, காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம் மற்றும் எம். தங்கவேல் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ‘அக்யூஸ்ட்’ வசூல் சிறப்பாக அமைந்துள்ளதால் அங்கும் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தபோது அவர்கள் படத்தில் நடித்தவர்களை அவரவர் கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்தே அழைத்து மகிழ்ந்தனர். குறிப்பாக நாயகன் உதயாவை அவரது கதாபாத்திரமான கணக்கு என்று அழைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த அளவிற்கு படம் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் 10 நிமிடம் போனதே தெரியவில்லை என்று ரசிகர்கள் படக்குழுவினரிடம் தெரிவித்தனர். பஸ் சண்டை காட்சி உள்ளிட்ட பல காட்சிகளை அவர்கள் நினைவு கூர்ந்து பாராட்டினார்கள்.

இது குறித்து பேசிய உதயா, “இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இதற்கு காரணமான படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்,” என்றார்.

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். நடிகர் உதயாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமான ‘அக்யூஸ்ட்’, உதயாவின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this