HomeCinemaகுடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவை படைப்பாக ரோபோ சங்கர் நடிப்பில் உருவான அம்பி மே 9-ல் ரிலீஸ்!

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவை படைப்பாக ரோபோ சங்கர் நடிப்பில் உருவான அம்பி மே 9-ல் ரிலீஸ்!

Published on

ரோபோ சங்கர் மேடைக் கலைஞராக தனது கலைப் பயணத்தை துவங்கி, சின்னத்திரை பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருப்பவர். அவர் ‘அம்பி’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.

ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விண்வெளி நாயகன் டாக்டர் கமலஹாசன் வெளியிட்டிருந்தார்.

இந்த படம் வரும் 9-ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் படத்தை இயக்கியிருக்கிற பாஸர் ஜெ எல்வினிடம் பேசியபோது, ”இது முழுக்க முழுக்க பேமிலி சப்ஜெக்டில் உருவான காமெடி படம். கதையின் நாயகன் நிஜத்தில் அம்பியாக, அப்பாவியாக, பயந்தாங்கோலியாக இருக்க அவனை சுற்றி உள்ளவர்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் தான் அனைத்தும் நடந்தது அவன் பெரிய வீரன், பெரிய அதிர்ஷ்டசாலி என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள்.

இப்படியான நம்பிக்கையில் மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்தார், இறுதியில் அம்பியாக இருந்தாரா இல்லை அந்நியனாக மாறினாரா என்பதுதான் கதை. அதை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவை படைப்பாக உருவாக்கியிருக்கிறோம்.

இந்த கதைப்படி கதையின் நாயகன் திருமணம் ஆகாத 40 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஒரு காமெடியன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரோபோ சங்கரை நடிக்க வைத்தேன். அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடந்தது” என்றார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this