HomeCinemaவிஜய் டிவி ராமர் நடித்துள்ள ‘அது வாங்குனா இது இலவசம்' பிப்ரவரி 14-ல் ரிலீஸ்!

விஜய் டிவி ராமர் நடித்துள்ள ‘அது வாங்குனா இது இலவசம்’ பிப்ரவரி 14-ல் ரிலீஸ்!

Published on

விஜய் டிவி ராமர் முதன்மை கதாபாத்திரத்திலும் கதாநாயகியாக கன்னட நடிகை பூஜாஸ்ரீயும் நடித்துள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்.’

ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில், குறும்படம், விளம்பரப் படம், இசை ஆல்பங்கள் இயக்கிய அனுபவம் கொண்ட  எஸ் கே செந்தில் ராஜன் எழுதி இயக்கும் முதல் படம் இது.

கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி, தப்பு பண்ணினால் தண்டனை என்கிற கருத்தை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் செந்தில் ராஜன் பேசியபோது, “ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதனால் என்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இதுவரை பார்க்காத ஒரு ராமரை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்திற்குப் பிறகு நிச்சயம் வடிவேலு போல மிகப்பெரிய அளவில் அவர் பேசப்படுவார்” என்றார்.

ஒரு முழு பாடல் முழுவதும் மழையில் நனைந்தபடி படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல படத்தில் இடம் பெறும் ஒரு ஐட்டம் பாடலை ஒரே நாளில் படமாக்கி இருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு சீசன் 10’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை நமீதா வெளியிட்டார்.

பிப்ரவரி 14 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தை ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

அர்வின் ராஜ் இசையமைத்துள்ளார் பாடல்களை இயக்குனர் எஸ் கே செந்தில் ராஜனே எழுதியுள்ளார். ஒளிப்பதிவை விக்னேஷ் மலைச்சாமி கவனிக்க, நாகராஜன்.டி படத்தொகுப்பு செய்துள்ளார். நடனத்தை சரவணன் வடிவமைத்துள்ளார்.

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this