HomeCinemaஎன்னைக் கட்டிப்பிடித்து அஜித் சார் மன்னிப்பு கேட்டார்! -'விடாமுயற்சி' படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பில் நடந்த...

என்னைக் கட்டிப்பிடித்து அஜித் சார் மன்னிப்பு கேட்டார்! -‘விடாமுயற்சி’ படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு தருணங்களைப் பகிர்கிறார் நடிகர் ஆரவ்

Published on

‘விடாமுயற்சி’ படத்தின் ஆக்ஷன் காட்சி அஜர்பைஜான் சாலையில் படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான BTS வீடியோ கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சில தருணங்கள் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ரசிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ‘விடாமுயற்சி’ படக்குழுவின் அர்ப்பணிப்பையும் உணர்த்தியது.

குறிப்பாக, அந்த தருணத்தில் காரை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற அஜித்குமார், உடனிருந்த நடிகர் ஆரவுக்கு எந்த ஒரு அடியும் படாமல் பார்த்துக் கொண்டார்.

நடிகர் ஆரவ் அந்த தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “இது நன்கு திட்டமிடப்பட்ட ஷாட்! ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்த முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்து அந்த காட்சியை படமாக்கி முடித்தோம். பின்பு, அஜித் சார் என்னை தனியாக விடவில்லை. அவரே மருத்துவமனைக்கு என்னை அழைத்து சென்றார். என் எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பார்த்த பிறகுதான் அவர் நிம்மதி அடைந்தார். என்னைக் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டதும் நான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் இல்லாமல் நின்றேன். அடுத்த நாளே, மீண்டும் ஷூட்டிங் வந்தார் அஜித் சார். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் ஏதும் பயன்படுத்தாததை அவர் உறுதி செய்து கொண்டார்.

அவர் ரசிகர்கள் அவரிடம் எப்போதும் சிறந்ததை எதிர்பார்ப்பார்கள் என்பதால் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதால் அவர் டூப் பயன்படுத்தவில்லை. அப்போதுதான், அவருக்கு பில்லியன் கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கான காரணத்தை என்பதை என்னால் உணர முடிந்தது” என்றார்.

‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப குழு:

இயக்குநர்: மகிழ் திருமேனி,
இசை: அனிருத் ரவிச்சந்தர்,
ஒளிப்பதிவாளர்: ஓம் பிரகாஷ் ISC,
எடிட்டர்: என்.பி.ஸ்ரீகாந்த்,
கலை இயக்குநர்: மிலன்,
ஸ்டண்ட் மாஸ்டர்: சுப்ரீம் சுந்தர்,
நடன இயக்குநர்: கல்யாண்,
ஆடை வடிவமைப்பு: அனு வர்தன்,
பாடலாசிரியர்: விஷ்ணு எடவன், அறிவு, அமோக் பாலாஜி, மோகன் ராஜா,
நிர்வாக தயாரிப்பாளர்: சுப்ரமணியன் நாராயணன்,
தயாரிப்பு நிர்வாகி: ஜே. கிரிநாதன், கே ஜெயசீலன்,
ஸ்டில்ஸ்: ஜி. ஆனந்த் குமார்,
விளம்பர வடிவமைப்பு: கோபி பிரசன்னா,
ஒலிப்பதிவு: டி. உதய்குமார்,
விஎஃப்எக்ஸ்: ஹரிஹரசுதன்,
DI வண்ணக்கலைஞர்: பிரசாத் சோமசேகர்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ் குமரன்

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this