HomeCinemaஃபைவ் ஸ்டார் நிறுவனம் வெளியிடுவதால் ஷாம் நடிக்கும் அஸ்திரம் படத்துக்கு அதிகரித்த எதிர்பார்ப்பு! 

ஃபைவ் ஸ்டார் நிறுவனம் வெளியிடுவதால் ஷாம் நடிக்கும் அஸ்திரம் படத்துக்கு அதிகரித்த எதிர்பார்ப்பு! 

Published on

ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையைச் சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கும் படம் ‘அஸ்திரம்.’

முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் டி எஸ் எம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். படத்தின் கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன்.

படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ’பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21-ல் தமிழகமெங்கும் வெளியிடுகிறது பைவ் ஸ்டார் நிறுவனம்.

இந்த படத்தின் கதையும், படமாக உருவாகி இருக்கும் விதமும் பைவ் ஸ்டார் செந்தில் அவர்களை ரொம்பவே ஈர்த்து விட்டது.  அதையடுத்து தங்கள் பைவ் ஸ்டார் நிறுவனம் மூலமாக வெளியிட இருப்பதால் இந்த நிறுவனம் வெளியிட்ட முந்தைய படங்கள் போலவே ‘அஸ்திரமும்’ ரசிகர்களின் வரவேற்பை பெறும்  என்பது உறுதியாகிறது.

ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் வெளியாக உள்ள ரேஞ்சர், ஜாக்சன் துரை ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, இறுதிச்சுற்று மற்றும்  சூரரைப்போற்று படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

கலை வடிவமைப்பை ராஜவேல் கவனிக்க, சண்டைப் பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார். ஏ.ஜான் மக்கள் தொடர்பாளராக பணிபுரிகிறார்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this