HomeCinemaஆறு மாதங்களில் கேரக்டருக்கேற்ற ஆச்சரியப்படுத்தும் ஃபிட்னஸ் சாத்தியமானது எப்படி? கிராவன் தி ஹண்டருக்கான ஒர்க் அவுட்...

ஆறு மாதங்களில் கேரக்டருக்கேற்ற ஆச்சரியப்படுத்தும் ஃபிட்னஸ் சாத்தியமானது எப்படி? கிராவன் தி ஹண்டருக்கான ஒர்க் அவுட் குறித்து விளக்குகிறார் நடிகர் ஆரோன் டெய்லர் – ஜான்சன்

Published on

நடிகர் ஆரோன் டெய்லர் – ஜான்சன் தனது ஆச்சரியப்படுத்தும் ஃபிட்னஸூக்காக பெயர் பெற்றவர். கிராவெனாக அவரது பாத்திரத்திற்கு அவர் தன்னை மாற்றிக் கொண்டது ரசிகர்களை மேலும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

2024-ம் ஆண்டின் மிகவும் ஹேண்ட்ஸமான நடிகர் என பெயர் பெற்ற இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் தன்னை சென்சேஷனல் நடிகராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கடுமையான வொர்க்அவுட் மற்றும் கண்டிப்பான உணவுப்பழக்கத்தையும் பின்பற்றி அவர் கச்சிதமான, வலிமையான இந்த உடலமைப்பைப் பெற்றுள்ளார். இதுதான் மார்வெல் கதாபாத்திரத்தை அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடனும் உருவாக்க அவருக்கு உதவியது.

சமீபத்திய உரையாடலில் இதுபற்றி அவர் மனம் திறந்து பேசிய அவர், கிராவன் கதாபாத்திரத்தின் ஆக்ரோஷமான, உடல் இயல்பை கொண்டு வர டெய்லர்-ஜான்சன் தனிப்பட்ட பயிற்சியாளர் டேவிட் கிங்ஸ்பரி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் நேட் ஷ்மிட் ஆகியோர் உதவியுடன் கிட்டத்தட்ட 35 பவுண்டுகள் தசையை உருவாக்க பல மாதங்கள் கடுமையாக உழைத்துள்ளார். “காமிக்ஸில் கிராவன் பிரம்மாண்டமானவர்” என்கிறார் டெய்லர்-ஜான்சன். மேலும், “அவரது வயிறு மற்றும் கைகள் அவரது உடையின் ஒரு பகுதியாகும். காமிக் புத்தகங்களின் கதாபாத்திரம் திரையில் வரும்போது அவரது உடல் தோற்றத்தையும் ரசிகர்கள் அப்படியே எதிர்பார்ப்பார்கள். அதனால், இந்தக் கதாபாத்திரத்தை எப்படி நம்பும்படி செய்வது என்ற பொறுப்பும் என்ககு இருந்தது. என் உடலின் மாற்றம் உடையில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது” என்றார்.

உடலை மாற்றுவது எளிதானது கிடையாது. ரசிகர்கள் எதிர்பார்ப்பது போன்ற பிரம்மாண்டத்தை உடலில் கொண்டு வர பல வருடங்கள் ஆகும். ஆனால், எங்களிடம் ஆறு மாதங்கள் மட்டுமே இருந்தன” என்றார்.

அதன்பிறகு, டெய்லர்-ஜான்சன் ஜிம்மில் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்தார். “எங்களிடம் ஒரு பெரிய டிரக் இருந்தது. அதில் நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உடற்பயிற்சி உபகரணங்களை கொண்டு சென்றேன்” என்கிறார் கிங்ஸ்பரி. “நாங்கள் வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை எடைப் பயிற்சி செய்தோம் – அப்பர் பாடி, லோயர் பாடி, அப்பர் பாடி, லோயர் பாடி ஸ்பிலிட்”.

மேலும் அவர் கூறியதாவது, “மிகவும் குறைந்த நேரமே எங்களிடம் இருந்தது. ஆனால், அதிகப்படியான பயிற்சியானது அதிகப்படியான தசை சேதத்தை உருவாக்கும். அதனால், மிகவும் கவனமாக இருந்தோம்” என்றார்.

‘கிராவன் தி ஹன்டர்’ என்பது மார்வெலின் மிகச் சிறந்த வில்லன்களில் ஒருவர். அவர் எப்படி உருவானார் என்பதற்கான ஆக்ஷன்-பேக்ட், ஆர்-ரேட்டட் கொண்ட தனிக்கதை. ஆரோன் டெய்லர்-ஜான்சன் தனது இரக்கமற்ற கேங்க்ஸ்டர் தந்தையான நிகோலாய் க்ராவினோஃப் (ரஸ்ஸல் குரோவ்) உடனான சிக்கலான உறவைக் கொண்ட க்ராவெனாக நடித்துள்ளார்.

Latest articles

அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்! -இயக்குநர் பேரரசு கோரிக்கை

பேருந்து கட்டணங்கள் விமான டிக்கெட் அளவுக்கு இருக்கு... அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை அரசு, தனியார் பேருந்துகளுக்கு நிர்ணயிக்க வேண்டும்! தீபாவளி,...

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உற்சாகமாக நடைபெற்ற ‘இராவணன் சோலையில் சிவன் மலை’ படத்தின் பூஜை! இசைஞானி இளையராஜா குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் 'இராவணன்...

 ஜாதி சார்ந்த கட்டுப்பாடு சமூகத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் இது! – ‘பனங்காட்டான்’ குறித்து இயக்குநர் வீரமுருகன்  

மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை உள்ளிட்ட படங்களை இயக்கிய வீரமுருகன் இயக்கியுள்ள படம் 'பனங்காட்டான்.'...

நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியீடு! 

https://www.youtube.com/watch?v=UUfAemccAJ0 தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ்...

More like this