HomeCinemaசிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக நிஜ ராணுவ வீரர்களிடம் பயிற்சியெடுத்து நடித்துள்ளார்! -அமரன் படத்தின் பிரஸ் மீட்டில்...

சிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக நிஜ ராணுவ வீரர்களிடம் பயிற்சியெடுத்து நடித்துள்ளார்! -அமரன் படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேச்சு

Published on

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘அமரன்’ திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

முன்னதாக படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சோனி பிக்சர்ஸ்ஸிடமிருந்து அமரன் படம் இயக்குவது பற்றிய எனக்கு வாய்ப்பு வந்தது. இது பற்றி உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து படத்தை வழங்குவதற்காக கேட்டோம். அவர் அமரன் படத்தின் கதையை கேட்டுவிட்டு மிகவும் பிடித்துப் போக தானும் தயாரிப்பு பார்ட்னராக இணைவதாக சொல்லி இணைந்தார். அன்று முதல் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.

ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதியை அவரது குடும்பத்தாரிடமிருந்து முறைப்படி பெற்றிருக்கிறோம். மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழு முடிவு செய்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனிடம் கதை கூறியதும் அவருக்கும் மிகவும் பிடித்தது. படத்தின் ஸ்கிரிப்ட்டை தன் கையில் வாங்கி வைத்துக்கொண்டு அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டார், துப்பாக்கி சுடுவது, ராணுவப் பயிற்சி போன்றவற்றை டெல்லி சென்று ராணுவ வீரர்களிடமே  எடுத்துக் கொண்டார். தனது உடற்கட்டையும் அதற்கேற்றார் போல் பயிற்சிகள் செய்து அசல் ராணுவ மேஜர்  போலவே இந்த  மாறிவிட்டார்.

பல்வேறு துணிச்சலான காட்சிகள்,  துப்பாக்கி சூடும் காட்சிகள், போர்க் காட்சிகள், தீவிரவாதிகள்.மீது  தாக்குதல் போன்றவற்றை எங்கெல்லாம் முகுந்த் வரதராஜன் பணியாற்றி மேற்கொண்டாரோ அந்த இடங்களுக்கு சென்று நடிக்க அதனை படமாக்கி இருக்கிறோம்.

இதில் சாய் பல்லவி முகுந்த் வரதராஜன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கி றார். இது பற்றி முகந்த் வரதராஜன் மனைவியை சந்தித்து சாய் பல்லவி  நேரில் சந்தித்து பேசி அவரது அனுபவத்தையும் கேட்டறிந்தார். பின்னர் சாய் பல்லவி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார்.

படத்தில் காதல் காட்சிகள் இடம்பெறுகிறது அது எல்லாம் திரைக்கதைக்காக சற்று சுவாரசியமாக அமைத்திருந்தாலும்  முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கும்  விதமாக அமைக்கப்பட வில்லை. இப்படம் முடிவடைந்து டெல்லியில் 900-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை படமாக்குவதற்காக முறைப்படி ராணுவ அதிகாரியிடம் படத்தின் கதை ஸ்கிரிப்ட் அளித்து அனுமதி பெறப்பட்டது. இதுதவிர படம் முடிந்த பிறகு அவர்கள் படத்தையும் சென்சார் அதிகாரிகள் போல பார்த்து , பாராட்டினார்கள்  இந்த படத்தை இந்தியா முழுவதும் உள்ள ராணுவ முகங்களில் திரையிட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

படத்தை உலகநாயகன் கமலஹாசன் பார்த்து பாராட்டினார். இந்த படம் சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக அளவிலான ஸ்கிரீன்களில் வெளியாகும் படம் மட்டுமல்ல அவர் நடிக்கும் பான் இந்திய படமாகவும் அமரன் அமைந்திருக்கிறது” என்றார்.

 

 

 

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...