HomeCinemaதனித்துவமான திரைப்படங்கள் வெளியிடுவதை எனது ஸ்பிரிட் மீடியா நோக்கமாக கொண்டுள்ளத! -'ஆல் வி இமேஜின் அஸ்...

தனித்துவமான திரைப்படங்கள் வெளியிடுவதை எனது ஸ்பிரிட் மீடியா நோக்கமாக கொண்டுள்ளத! -‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ பட நிகழ்வில் ராணா டகுபதி பேச்சு

Published on

இயக்குநர் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது.

இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22, 2024 அன்று மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தா உட்பட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும்  வெளியாகிறது.

மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படவெளியீடு பற்றி இயக்குநர் பாயல் கபாடியா பேசியபோது, “இந்த படத்தை செதுக்க பல வருடங்கள் எடுத்துக் கொண்டோம். மேலும் ஸ்பிரிட் மீடியாவுடனான இணைந்திருப்பது படத்தை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் எடுத்து செல்லும் என்பதில் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய படம் இந்தியத் திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. இந்திய பார்வையாளர்கள் திரையரங்குகளில் டிக்கெட் வாங்கி பெரிய திரையில் படத்தைக் கொண்டாடுவதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்றார்.

நடிகர், தயாரிப்பாளர் ராணா டகுபதி பேசியபோது, “இந்தியத் திரையரங்குகளில் இந்த சிறந்த படம் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள கதைகளைக் கொண்டு வருவதை ஸ்பிரிட் மீடியா நோக்கமாகக் கொண்டுள்ளது. பாயலின் அழகான இந்தத் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

இந்தப் படம், பிரான்சின் பெட்டிட் சாகோஸ் மற்றும் இந்தியாவின் சாக் & சீஸ் ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ இண்டோ, பிரெஞ்ச் கூட்டுத் தயாரிப்பு!

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this