HomeCinemaஅமைச்சர் சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட, சி டி எம் ஏ நடத்திய சென்னை...

அமைச்சர் சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட, சி டி எம் ஏ நடத்திய சென்னை ஆவணிப்பூவரங்கு!

Published on

சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு சிறப்பு முயற்சியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எம். மதிவேந்தன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார். இவர்களுடன் நடிகர்கள் மஹத் ராகவேந்திரா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திரு பி.கே. சேகர் பாபு பேசுகையில், “தேவைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ள இந்தக் கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆவணிப்பூவரங்கு 2024 மூலம் பெறப்படும் நிதி, நிலச்சரிவுகளால் இடம்பெயர்ந்த வயநாட்டில் வசிப்பவர்களுக்கு ஆதரவளிக்க ஒதுக்கப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற முன்னெடுப்புகள் ஊக்கம் தருகிறது” என்றார்.

டாக்டர் எம்.மதிவேந்தன் கூறுகையில், “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உன்னத நோக்கத்துடன் ஆவணிப்பூவரங்கு 2024 கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்விற்கு காரணமான ஒட்டுமொத்த குழுவிற்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ருசியான ஓணம் சத்யா, இரு குழுக்களுக்கு இடையேயான பாரம்பரிய கயிறு இழுத்தல், வண்ணமயமான பூக்கோளம் போட்டி, பிரமாண்ட நடனம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல வேடிக்கையான நிகழ்வுகளுடன் இந்த இரண்டு நாள் பண்டிகை நிகழ்வு கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகமான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. நிகழ்வின் போது பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன.

ஸ்ரீ வி.சி. பிரவீன், சி.டி.எம்.ஏ. பிரெசிடண்ட் பிரவீன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் மலையாளிகளின் வாழ்வாதாரம் நலமுடன் இருப்பதற்கும் நிலச்சரிவு மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this