HomeCinemaஎங்க அப்பா தனியிசைப் பாடலில் நடித்து, இயக்குநர் பாக்யராஜிடம் பாராட்டுபெற்ற பேபி லக்சனாரிஷிக்கு குவியும் சினிமா...

எங்க அப்பா தனியிசைப் பாடலில் நடித்து, இயக்குநர் பாக்யராஜிடம் பாராட்டுபெற்ற பேபி லக்சனாரிஷிக்கு குவியும் சினிமா வாய்ப்புகள்!

Published on

‘கால் கொலுசு’ படத்தை நடித்து தயாரித்து இயக்கிய டாக்டர் எஸ் வி ரிஷி சமீபத்தில் மறைந்த தனது தந்தையின் நினைவாக ‘எங்கள் அப்பா’ என்ற மியூசிக் ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் தனது மகள் லக்‌ஷனா ரிஷியை பாடலுக்கு ஏற்ப வாயசைக்க வைத்து, நடனம் ஆட வைத்து நடிக்க வைத்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்த விழாவில் டைரக்டர் கே பாக்யராஜ், டைரக்டர் பேரரசு போன்ற பிரபலங்கள் கலந்துக்கொண்டு குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியின் நடிப்பைப் பார்த்து ‘எதிர்காலத்தில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகவும் பெரியநாயகியாகவும் வருவாய்’ என்று பாராட்டியும் வாழ்த்தியும் பேசியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் லக்‌ஷனா ரிஷியை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைக்க தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு பேசியிருக்கிறார்கள் இதில் முன்னணி ஹீரோக்களின் படங்களும் அடங்கும்
எஸ் வி ரிஷியும் தான் சொந்தமாக தயாரித்து நடித்து இயக்கப்போகும் படத்திலும் லக்‌ஷனா ரிஷியை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

ஏவிஎம் மின் முதல் இடம் படத்தை இயக்கிய ஆர் குமரன் உருவாக்கும் புதிய படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் நிறுவனமும்பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள்.

இந்த குழந்தை நட்சத்திரம் 3 வயதிலேயே திருக்குறளை | சிலப்பதி காரத்தை மனப்பாடமாக சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டவராக இருக்கிறார். பல யூடியூப்களில் ‘ருசியாக சமைப்பது எப்படி’ என்று நேரடியாக சமைத்துக்காட்டியிருக்கிறார். இது பல யூடியூப்களில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களைப் பார்த்தால் அவர்கள் நடித்திருப்பதை போல் அப்படியே நடித்தும். நடனமாடியும் காட்டுகிறார்.

இவருக்குப் பிடித்த ஹீரோக்கள் விஜய் , தனுஷ் .,விஜய் சேதுபதி
இப்போது இவர் திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூரில் இருக்கும் கோல்டன் கேட்ஸ் வித்யாஸ்ரமத்தில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தத்தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின்னாளில் பிரபலமான கலைஞர்களாக உயர்ந்த கமலஹாசன், ஸ்ரீ தேவி. குட்டி பத்மினி , பேபி ஷாலினி போன்று தனது மகள் லக்‌ஷனா ரிஷியையும் பிரபலமானகுழந்தைநட்சத்திரமாக உருவாக்க வேண்டும் அதுதான் எங்கள் லட்சியம் என்கிறார்கள் பேபி லக்சனாவின் பெற்றோர்.

Latest articles

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான்...

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகிறது!

வால்வாட்சர் ஃபிலிம் நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர்...

More like this