HomeGeneralசென்னையில் மினி ஒலிம்பிக் நடத்த உள்ளோம்! -கோவாவில் நடக்கவுள்ள 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களை...

சென்னையில் மினி ஒலிம்பிக் நடத்த உள்ளோம்! -கோவாவில் நடக்கவுள்ள 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களை வழியனுப்பும் நிகழ்வில் டாக்டர் ஐசரி கணேஷ் பேச்சு

Published on

கோவாவில் வரும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 9 வரை 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 530 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களை வழியனுப்பும் நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

நிகழ்வில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். இவர்களுடன் 116 அதிகாரிகள் கொண்ட குழுவும் கோவா செல்கிறது.

நிகழ்வில் பேசிய ஐசரி கணேஷ், ‘‘கடந்த தேசிய விளையாட்டு போட்டியில் நமக்கு ஐந்தாம் இடம் கிடைத்தது, இந்த முறை இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்திற்கு வருவார்கள் என நம்புகிறோம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளிக்கவுள்ளோம். மட்டுமல்லாது சென்னையில் மினி ஒலிம்பிக் நடத்த உள்ளோம். விளையாட்டில் அரசியலையும் சிபாரிசையும் அனுமதிக்க மாட்டோம். விரைவில் தமிழகத்தில் தேசிய அளவில் போட்டிகள் அதிகம் நடைபெறும்” என்றார்.

ஆதவ் அர்ஜுனா பேசியபோது, ‘‘தமிழ்நாட்டு வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற கனவு விரைவில் நனவாகும். அதற்கான முன்னோட்டமாக ஆசிய விளையாட்டு போட்டி பதக்கங்கள் வென்றுள்ளோம். அந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாக விரைவில் பிரமாண்ட விழா நடத்தப்படும். அனைத்து வீரர்களும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

Latest articles

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார்! -‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு...

பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லவ் ஓ லவ்'...

More like this