HomeCinemaமுக்கிய கதாபாத்திரத்தில் நாய்; ரஜினி ரசிகராக கதாநாயகன்; சென்டிமென்ட் கலந்த திரில்லராக 'தில்ராஜா.'

முக்கிய கதாபாத்திரத்தில் நாய்; ரஜினி ரசிகராக கதாநாயகன்; சென்டிமென்ட் கலந்த திரில்லராக ‘தில்ராஜா.’

Published on

விஜய் சத்யா ரஜினி ரசிகராக நடிக்கும் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரில்லர் திரைப்படம் ‘தில்ராஜா.’

சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி உள்ளிட்ட வெற்றிப்  படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான ஜனரஞ்சகமான படைப்பாக இயக்கியிருக்கிறார்.

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ்’ கோவை பாலா பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி, தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார். அவரோடு இணைந்து நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

கதாநாயகியாக ஷெரின் நடிக்க வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘விஜய் சத்யாவிற்கு இந்த படத்திற்கு பிறகு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படியொரு சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்’ என்கிறது படக்குழு.

அம்ரீஷ் இசையில், கலைக்குமார் வரிகளில், ஆண்டனிதாசன் குரலில் ‘சாமி குத்து’ என்ற பாடல் வெளியாகி சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

படம் இந்த மாதம் கெளியாகவுள்ளது. படத்தை பி வி ஆர் ஐநாக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

படக்குழு:-
இசை: அம்ரீஷ்
பாடல்கள்: நெல்லை ஜெயந்தா, கலைகுமார்
ஒளிப்பதிவு: மனோ வி நாராயணா
கலை: ஆண்டனி பீட்டர்
நடனம்: செந்தாமரை
எடிட்டிங்: சுரேஷ் அர்ஷ்
ஸ்டண்ட்: சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை: நிர்மல்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

Latest articles

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

More like this

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...