HomeCinemaபேட் பாய்ஸ் படத்தில் புதிய அவதாரம்... காமெடியும் ஆக்‌ஷனும் கலந்து அசத்தும் ரஹ்மான்! 

பேட் பாய்ஸ் படத்தில் புதிய அவதாரம்… காமெடியும் ஆக்‌ஷனும் கலந்து அசத்தும் ரஹ்மான்! 

Published on

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேலான படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ரஹ்மான், இப்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘பேட்பாய்ஸ்.’

காதல், செண்டிமெண்ட்,ஆக்‌ஷன் கேரக்டர்களில் நடித்திருந்தாலும், காமடியோடு கலந்த ஆக்‌ஷன் கேரக்டரில் இதுவே முதல் தடவையாக இதில் நடித்திருப்பது சிறப்பு.

தனது வழக்கமான கேரக்டரிலிருந்து மாற்றி நடித்த இப்பட டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்று வைரலாகி இருப்பது படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் படம் பற்றி ரஹ்மானிடம் கேட்டபோது, ”இது பல ஆண்டுகளுக்கு பிறகு நகைச்சுவை டிராக்கில் நான் மிகவும் ரசித்து ரிலாக்ஸாக நடித்த படம். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சீரியஸ் வேடங்களில் நடித்து அலுத்து போன வேளையில் தான் டைரக்டர் ஓமர் இந்த கதையை என்னிடம் சொன்னார். அவரும் எழுத்தாளர் சாரங்கும் கதை சொல்லும் போதே நான் சிரித்து..சிரித்து கொண்டேதான் கேட்டேன். வயது பாரமட்சம் இல்லாமல் நம் மனதில் ஒரு சிறுபிள்ளைத்தனம், குழந்தைத்தனம் ,ஒரு ஹீரோயிசம் இருக்கும். இது எல்லோரது மனதிலும் இருக்கும். அப்படி ஒரு கனவு உலகில் வாழ்பவர் தான் ஆண்டப்பன் என்ற ஹீரோ கேரக்டர். அவனுக்கு படிப்பு கிடையாது. ஆனால் மனதில் நிறைய அன்பு இருக்கிறது. எல்லோருக்கும் உதவுவான் என்பது தான் அவனது ஒரே தகுதி.

இது வரை நான் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம். வித்தியாசமான பாடி லாங்வேஜ், அப்பியரன்ஸ், ஆக்டிவிடீஸ் எல்லாம் ஆண்டப்பனுக்கு தான். இந்த கதையும் கதாபாத்திரமும் எனக்கொரு சேஞ்ச்சாக அமைந்துள்ளது.

என்ன நம்பிக்கையில் ஓமர் இந்த ஹீரோ கேரக்டருக்காக என்னை தேர்ந்து எடுத்தார் என்பது வியப்பாக உள்ளது. ஏனெனில் நான் இது நாள் வரை இப்படி ஒரு முழு நீள நகைச்சுவை படமோ, கதாபாத்திரமோ செய்ததில்லை. இதுவரை நடித்த மற்ற சினிமாக்களை விட மிகவும் ரிலாக்ஸாக இதில் நடித்தேன். எல்லோரையும் கவரும் ஒரு ஃபன் மூவி… இனி மேல் இது போன்ற காமடி கதைகளில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்… பேட் பாய்ஸ் மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது…. எல்லோரும் குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்” என்றார்.

Latest articles

‘ராமாயணா’ திரைப்படத்திலிருந்து ராமர் – சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=mm1Qm8JT0Gw நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்...

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் நாயகனாகவும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்' திரைப்படத்தின்...

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

More like this