HomeCinemaபிரபாஸ் நடிக்கும் புதிய படம் துவங்கியது! ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரமாண்டமாகா உருவாகிறது.

பிரபாஸ் நடிக்கும் புதிய படம் துவங்கியது! ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரமாண்டமாகா உருவாகிறது.

Published on

நடிகர் பிரபாஸ் ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களையடுத்து இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கும் படத்தில் நடிக்கிறார். கற்பனைக்கும் எட்டாத பிரமாண்டமான படைப்பாக தயாராகும் இந்த படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக ‘# பிரபாஸ் ஹனு’ எனும் இந்த படத்தில் இணைகிறார்கள். இந்த கூட்டணியின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுவதால்.. இந்த படைப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பிரமாண்டமான பங்களிப்புடன் உருவாகும் இந்த #பிரபாஸ் ஹனு படைப்பின் மூலம், சினிமா ரசிகர்களுக்கு இதற்கு முன் கிடைத்திராத புதிய அனுபவத்தை வழங்கவிருப்பதாக உறுதியளிக்கிறது.

ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும் நம் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களை பிரதிபலிப்பதில்லை. ஆனால் இந்த கதை – ஒரு போர் வீரன் தனது தாய் மண்ணின் மக்களுக்காக அவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக எழுதப்பட்டிருக்கிறது.

1940களின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்று புனைவு கதை அல்லது மாற்று வரலாறு உலகின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறந்து போன உண்மைகளுக்கும்.. ஒரே பதில் போர் என நம்பிய ஒரு சமூகத்தின் நிழலில் இருந்து எழுந்த ஒரு போர் வீரனின் கதை.

இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் புகழ்பெற்ற பிரபல நடிகர்களான மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜெயப்பிரதா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். உலகளாவிய தயாரிப்பு மதிப்பு மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த நவீன தொழில் நுட்பங்களுடன் அதிக பொருட்செலவில் இந்த திரைப்படம் தயாராகிறது.

# பிரபாஸ் ஹனு என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் பிரபாஸ் மற்றும் இமான்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this