HomeCinemaபிறந்தநாளில் முன்னுதாரண செயல்பாடு... தமிழகம் முழுக்க 5000 மரக்கன்றுகள் நட முடிவெடுத்த நடிகர் சௌந்தரராஜா!

பிறந்தநாளில் முன்னுதாரண செயல்பாடு… தமிழகம் முழுக்க 5000 மரக்கன்றுகள் நட முடிவெடுத்த நடிகர் சௌந்தரராஜா!

Published on

சௌந்தரராஜா தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் / நடித்துக் கொண்டிருப்பவர். கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சுற்றுச்சூழல் ஆர்வலருமான சௌந்தரராஜா இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான மரங்களை நட்டு வருகிறார். அந்த வகையில், சௌந்தரராஜா தனது பிறந்தநாள் மற்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடினார். இதையொட்டி காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அருகே உள்ள தன்னூர் கிராமத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240  மரக்கன்று நட்டார். நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 500 மரக்கன்றுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக நடப்பட்டது. 6 மாதம் தொடர்ச்சியாக 5000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளார். நடுவது மட்டுமில்லாமல் அதை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளார்.

இதுதவிர மரங்களை நடுவதற்கும் தனது அறக்கட்டளை உதவி செய்யும் என்று சௌந்தரராஜா அறிவித்துள்ளார். மக்கள் தங்களது ஊரில் மரங்களை நடுவதற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தால், அவரது குழுவினர் குறிப்பிட்ட ஊரில் மர்க்கன்று நடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நடிகர் சௌந்தரராஜா மீது கொண்ட அன்பிற்கும், சமூக அக்கறைக்கும் அவரது நண்பர் ஜேப்பியார் பேரன் ஜெய்குமார் (சத்தியபாமா பல்கலைக்கழகம்) மற்றும் அவரது மனைவி டாக்டர் சரண்யா ஜெய்குமார் (Education  Phsycolosit) விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளனர்.

Latest articles

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து...

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

'மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ' என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு. ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

More like this