HomeCinemaமுதன் முறையாக இசையமைத்த 'மின்மினி' ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜாவுக்கு பெற்றுத் தந்த அங்கீகாரம்!!

முதன் முறையாக இசையமைத்த ‘மின்மினி’ ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜாவுக்கு பெற்றுத் தந்த அங்கீகாரம்!!

Published on

மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசையார்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். அதை ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ செய்துள்ளது. மூன்று பதின்ம வயதினரை சுற்றி நடக்கும் கதை ஃபீல் குட் திரைப் படைப்பாக உருவாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 9; 2024-ல் வெளியாகிறது.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள கதீஜா, தனது தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் ‘எந்திரன்’ படத்தில் வெளியான ‘புதிய மனிதா…’ பாடலில், ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா பாடகியாக தனது மயக்கும் குரல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இப்போது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.

1992-ம் ஆண்டு இசையமைப்பாளர் ரஹ்மான் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். அவரது மகள் கதிஜா ‘மின்மினி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். அவரது அற்புதமான பின்னணி இசை மற்றும் மெலோடி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் கதிஜா ரஹ்மான் பேசியபோது “இதுபோன்ற மனதுக்கு இதமான பாராட்டுக்களைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். சரியான வழிகாட்டுதலுடன் எனது பலத்தை வளர்த்த என் குடும்பத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் தான் எல்லாப் புகழும்.

தமிழ்த் திரையுலகில் எனது இசைப் பயணத்தைத் தொடங்க ‘மின்மினி’ போன்ற ஒரு படம் எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தின் எமோஷன் மற்றும் சூழல் எனக்கு சிறந்த இசை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இதயத்தைத் தொடும் நல்ல செய்தியுடன் சிறந்த இயக்கமும் ஒளிப்பதிவும் இருப்பது இந்தக் கதையின் பலம். இந்த வாய்ப்பைக் கொடுத்து எனக்கு ஆதரவு கொடுத்து நம்பிக்கையளித்த ஹலிதா ஷமீம் மேம், மனோஜ் பரமஹம்சா சார் மற்றும் முரளி சார் அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்” என்றார்.

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this