HomeCinemaஏ ஆர் ரஹ்மான், பிரபு தேவா இணைந்த படத்திற்கு மூன் வாக் என்ற தலைப்பை அறிவித்த...

ஏ ஆர் ரஹ்மான், பிரபு தேவா இணைந்த படத்திற்கு மூன் வாக் என்ற தலைப்பை அறிவித்த படக்குழு!

Published on

ஏ ஆர் ரஹ்மானும், பிரபு தேவாவும் இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகள். அவர்கள் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) நிறுவனம் தங்களது பெருமைமிகு முதல் படைப்பாக தயாரித்து வருகிறது. படத்தை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் என் எஸ் இயக்குகிறார்.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு அம்சங்களுடன், நகைச்சுவை கலந்த அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினராக தயாராகும் இந்த படத்தில் பிரபு தேவாவுடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

படத்திற்கு #ARRPD6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது. அதையடுத்து படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ‘மூன் வாக்’ எனும் அசத்தலான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா இணைகிறார்கள் என்ற நிலையில், இருவரையும் போற்றும் வகையிலும், அவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையிலும் ‘மூன் வாக்’ தலைப்பு அமைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏ ஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைவரையும் மயக்கும் வகையில் தயாராகி வருகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு பான் இந்திய படைப்பாக திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

படக்குழு:-

தயாரிப்பு: மனோஜ் என் எஸ், திவ்யா மனோஜ், பிரவீன் இலக்

தயாரிப்பு வடிவமைப்பு: ஷானு முரளிதரன்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

ஒளிப்பதிவு: அனூப் வி எஸ்

எடிட்டிங்: ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா

Latest articles

திரைத்துறையினர் கூடிய பிரமாண்ட விழாவில் தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப...

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

More like this