HomeMovie Reviewதலைமைச் செயலகம் வெப் சீரிஸ் விமர்சனம்

தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் விமர்சனம்

Published on

அரசியல் களத்தின் சூழ்ச்சிகளை சுற்றிச் சுழலும் ‘தலைமைச் செயலகம்.’

தமிழ்நாடு முதலமைச்சர் அருணாச்சலம் உண்மையிலேயே நல்லவர்; ‘அரசாங்கமென்பது மக்களுக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே’ என்ற எண்ணத்தோடு ஆட்சி நடத்துபவர். அப்படியிருந்தும் அவர் ஊழல் வழக்கில் சிக்குகிறார். சிறை தண்டனை உறுதியாகிறது. அவருக்கு அடுத்து முதலமைச்சராவது யார் என்பது ZEE 5 தளத்தில் வெளியாகியுள்ள 8 எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரின் கிளைமாக்ஸ். முதலமைச்சர் ஊழல் வழக்கில் சிக்கியது எப்படி என்பதெல்லாம் திரைக்கதையில்… இயக்கம் வசந்தபாலன்

முதலமைச்சராக வருகிற கிஷோரின் தோற்றமும், தேர்ந்த நடிப்பும் அசத்துகிறது.

நல்ல நோக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான காய் நகர்த்ததில் கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்கிற ஸ்ரேயா ரெட்டி, கொற்றவை என்ற கனமான பாத்திரத்தில் கதைக்களத்தை தூக்கிச் சுமந்திருக்கிறார். அந்த ஆரம்பக் காட்சி மிரட்டல்.

முதலமைச்சரின் மகளாக, அதிகார ஆசையில் வலம்வருகிற ரம்யா நம்பீசன் ஆளுமையாக திரையில் நிறைந்திருக்க, போலீஸ் இன்ஸ்பெக்டராக பரத், ஒய் ஜி மகேந்திரன், ஆதித்யா மேனன், நிரூப், சாரா பிளாக், சித்தார்த் விபின், கவிதா பாரதி தர்ஷா குப்தா உள்ளிட்ட ஏராளமான பிரபலமான நடிகர், நடிகைகளின் பங்களிப்பு கதைக்களத்தை பலப்படுத்தியிருக்கிறது.

தன் பின்னணி இசையால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஓடும் தொடரில் இருக்கிற பரபரப்பின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜிப்ரான்.

தமிழ்நாட்டில் தொடங்கி ஜார்க்கண்ட் அது இதுவென வட மாநிலங்கள் பலவற்றில் கதையின் சம்பவங்கள் நடந்தேற அதற்கேற்றபடி கேமரா சுமந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிஷங்கர்.

தமிழக அரசியல் களத்தின் கடந்த 50, 60 ஆண்டுகால சம்பவங்களைத் திரும்பிப் பார்க்கும் விதமாக, அப்போதிலிருந்து இப்போது வரை ஆண்டவர்களை, ஆள்பவர்களை நினைவுபடுத்தும் விதமாக கதைக்களத்தை துணிச்சலாக அமைத்திருக்கும் வசந்தபாலன் சில காட்சிகளில் பாய்ச்சலின் வேகத்தைக் குறைத்திருக்கிறார்.

பரபரப்பான கிரைம் திரில்லருக்கு சமமான, சில காட்சிகளில் ரத்தம் தெறிக்கிற இந்த அரசியல் சதிராட்டம் சதியாட்டம் அரசியல் யாருக்கெல்லாம் பிடிக்குமோ, யாரெல்லாம் அரசியல் களத்தை உற்றுக் கவனிக்கிறார்களோ அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். மற்றவர்களும் தாராளமாய் பார்க்கலாம்!

Rating 4/5

 

 

 

 

Latest articles

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார்! -‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு...

பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லவ் ஓ லவ்'...

More like this

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...
அரசியல் களத்தின் சூழ்ச்சிகளை சுற்றிச் சுழலும் 'தலைமைச் செயலகம்.' தமிழ்நாடு முதலமைச்சர் அருணாச்சலம் உண்மையிலேயே நல்லவர்; 'அரசாங்கமென்பது மக்களுக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே' என்ற எண்ணத்தோடு ஆட்சி நடத்துபவர். அப்படியிருந்தும் அவர் ஊழல் வழக்கில் சிக்குகிறார். சிறை தண்டனை உறுதியாகிறது. அவருக்கு அடுத்து முதலமைச்சராவது யார் என்பது ZEE 5 தளத்தில் வெளியாகியுள்ள 8 எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரின் கிளைமாக்ஸ்....தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் விமர்சனம்