HomeCinemaதாயில்லாத குழந்தைக்குத் தாயாக மாறும் பால்வாடி டீச்சர்... பரபரப்பும் விறுவிறுப்புமாய் சன் டி.வி.யின் 'மல்லி.'

தாயில்லாத குழந்தைக்குத் தாயாக மாறும் பால்வாடி டீச்சர்… பரபரப்பும் விறுவிறுப்புமாய் சன் டி.வி.யின் ‘மல்லி.’

Published on

மல்லி. இது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய மெகா தொடர்.

இந்த தொடரை மணிபாரதி இயக்க, மாரிமுத்து திரைக்கதை எழுதியிருக்கிறார். வசனங்களை மருது சங்கர் எழுத, அகிலன் ஒளிப்பதிவு செய்ய, தரன் இசையமைக்கிறார்.

ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தில் கதாநாயகி எப்படி வந்து இணைகிறார் என்பதே இந்த தொடரின் கதை.

மல்லி பெருமாள்புரம் கிராமத்தில் பால்வாடி டீச்சராக பணிபுரிகிறார். அந்த பள்ளியில் நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்டு அதன் மூலம் பிரச்சினைகளில் சிக்கி, சென்னைக்கு வரும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். சென்னையில் தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் குழந்தை வெண்பா, அவள் தந்தை விஜயிடம் தனக்கு அம்மா வேண்டும் என கேட்டு போராடுகிறாள்.

இரண்டாவது திருமணத்தில் உடன்பாடு இல்லாத விஜய், குழந்தையை சமாளிக்க என்ன செய்கிறான்? மல்லி அந்த குழந்தைக்கு எப்படி தாயாக வந்து சேர்கிறாள்? என்பதை விறுவிறுப்பான சம்பவங்களோடு, திருப்பங்களோடு தொடர் சுவாரஸ்யமாக நகர்கிறது.

இந்த தொடரை சரிகம நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட்செலவில், பி ஆர் விஜயலட்சுமி தயாரிக்கிறார்.

விஜய், நிகிதா, பேபி ராகிலா, மாஸ்டர் நிதீஷ், பூர்ணிமா பாக்யராஜ், மதன் பாப், தேவ் ஆனந்த், சாய்ராம் வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதி மோகன், ஐசக் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

படைப்பாக்கம் நீடா. கே.சண்முகம், படைப்பாக்கத் தலைமை பிரின்ஸ் இம்மானுவேல்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this