HomeCinemaலெவன் படத்திற்காக டி.இமான் இசையில் முதன்முறையாக பாடிய மனோ!

லெவன் படத்திற்காக டி.இமான் இசையில் முதன்முறையாக பாடிய மனோ!

Published on

நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில், ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்.’

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அவரது இசையில் பிரபல பாடகர் மனோ முதன்முறையாக பாடியுள்ளார். பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.

உணர்ச்சிப் பூர்வமான இந்த பாடல் குறித்து பேசிய மனோ, “இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் டி இமான், “மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார்” என்றார்.

‘லெவன்’ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் இடம்பெறுகிறது. இமான் இசையில் மனோ அவர்கள் முதல் முறையாக பாடியது ‘லெவன்’ திரைப்படத்திற்காக என்பது மிகுந்த பெருமை,” என்று கூறினார். இப்பாடலின் எழுதியுள்ளார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

லோகேஷ் அஜில்ஸ் இயக்குநர் சுந்தர் சியிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

நவீன் சந்திரா ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் ‘பிரம்மன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சமீபத்தில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட வெப் சீரிஸான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யிலும் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

‘லெவன்’ திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.

Latest articles

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

ஜெயராம் –அஷ்வின் நடிக்கும் குட் நியூஸ் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் லைட் வெயிட் பேபி படத்தின் படப்பிடிப்பு நிறைவு… ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும்...

More like this