HomeCinemaமகாமுனி, மெளனகுரு படத்திற்கு அடுத்தபடியாக இந்த படம் வேறொரு அனுபவத்தைகொடுக்கும்! -ரசவாதி படத்தின் ப்ரீ ரிலீஸ்...

மகாமுனி, மெளனகுரு படத்திற்கு அடுத்தபடியாக இந்த படம் வேறொரு அனுபவத்தைகொடுக்கும்! -ரசவாதி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சாந்தகுமார்

Published on

அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்க, சாந்தகுமார் இயக்கியுள்ள படம் ‘ரசவாதி.’ இந்த படம் வரும் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது.

இயக்குநர் சாந்தகுமார், நடிகர் அர்ஜூன் தாஸ், ஜி எம் சுந்தர், நடிகைகள் தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா, தீபா, நடிகர்கள் சுஜித், அருள்ஜோதி, ரிஷிகாந்த், எடிட்டர் சாபு ஜோசப், ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு, இணைத் தயாரிப்பாளர் கோவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் சாந்தகுமார், “என்னுடைய படம் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் சொன்னால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய குழு தான். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள், பப்ளிசிட்டி என எல்லாருமே தங்கள் சிறந்த உழைப்பை கொடுத்துள்ளனர். ‘ரசவாதி’ சிறப்பாக வந்துள்ளது. ‘மகாமுனி’, ‘மெளனகுரு’ படத்திற்கு அடுத்தபடியாக இந்தப் படம் வேறொரு அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் அர்ஜூன் தாஸ், “எனக்கு இந்த படத்தில் சூப்பரான கதாபாத்திரம். கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை சாந்தகுமார் சார் அழைத்தார். அவர் என்னை தாஸ் என்றுதான் கூப்பிடுவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. மே 10 அன்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்” என்றார்.

நடிகர் ஜி.எம்.சுந்தர், “‘ரசவாதி’ என்ற டைட்டிலே பிரமாதமான விஷயம். தனக்குள் ஏற்படும் விஷயத்தால் ஆளே மாறிப்போகும் ஒருவனின் கதைதான் இது. ‘மகாமுனி’ படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்தார். அதேபோலதான், இந்தப் படத்திலும். அர்ஜூன் தாஸ், தான்யா என உடன் நடித்தவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.

Latest articles

ஜாய் மேத்யூ, வைசாக் ரவி நடிப்பில் மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கிய ஹாரர் திரில்லர் ‘அரூபி’ ஜூலை 3-ம் தேதி ரிலீஸ்!

மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் 'அரூபி.' ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேஹா...

70% படத்தை எடுத்துவிட்டு,  வேண்டாம் என்று தூக்கிப்போட்டு, மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்திருப்பது பெரிய சாதனை! – ‘தி டார்க் ஹெவன்’ பட விழாவில்...

சீரியல் ஆர்டிஸ்ட் சித்து கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் 'தி டார்க் ஹெவன்.' 'கோதை என்டர்டெயின்மெண்ட்' மற்றும் 'எம்.எஸ்.ஸ்விஸ் ஃபிலிம்...

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

More like this