HomeCinema'13' படத்தின் தலைப்புக்கேற்ப டப்பிங் பணிகளை துவங்கிய ஜீ வி பிரகாஷ்!

’13’ படத்தின் தலைப்புக்கேற்ப டப்பிங் பணிகளை துவங்கிய ஜீ வி பிரகாஷ்!

Published on

ஜீ வி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க, கே.விவேக் இயக்கியுள்ள திரைப்படம் ’13.’ கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், ‘கதிர்’ படப்புகழ் பவ்யா த்ரிக்கா, தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் அன்சு பிரபாகர் தயாரிப்பில், படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் நடந்து முடிந்தது. அதையடுத்து படத்தின் டப்பிங் பணிகளை ஜீ.வி.பிரகாஷ் மே 4; 2024 அன்று 13:13 மணியளவில் டப்பிங் பேசி தொடங்கிவைத்தார்.

ஜீ வி பிரகாஷ்குமார் பேசியபோது, “’13’ படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக்களம் புதிதாக இருக்கிறது. ‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

படம் குறித்து இயக்குநர் விவேக் பேசியபோது, “‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்” என்றார்.

Latest articles

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

More like this