HomeCinemaதாயின் பாசப் போராட்டத்தோடு திகில், திரில் அனுபவம்... எதிர்பார்ப்பைத் தூண்டும் 'பிஹைண்ட்.'

தாயின் பாசப் போராட்டத்தோடு திகில், திரில் அனுபவம்… எதிர்பார்ப்பைத் தூண்டும் ‘பிஹைண்ட்.’

Published on

‘மூச்சைப் பிடித்துக் கொள்; பின்னால் பதுங்கி இரு’ என்கிற பரபரப்போடு, உணர்ச்சிகரமான காட்சிகளோடு, ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக தமிழ், மலையாள மொழிகளில் உருவாகியிருக்கிறது ‘பிஹைண்ட்’ திரைப்படம். அமன் ரஃபி எழுதி இயக்கியுள்ளார்.

ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற கண்ணுக்குத் தெரியாத அந்த ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.

ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படத்தின் கதை.

படத்தில் பாசமுள்ள உணர்ச்சிகரமான தாயாக, லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார். அவரது கணவராக, கதாநாயகனாக ஜினு இ தாமஸ் நடிக்க, மகளாக மினு மோல் நடித்துள்ளனர். படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன.

படப்பிடிப்பு கேரளாவில் திருச்சூர், வாகமன், குட்டிக்கானம், மூணார், ஏலப்பாறா உள்ளிட்ட இடங்களில் 40 நாட்கள் நடைபெற்றது.

ஷிஜா ஜினு படத்துக்கான கதையெழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

விரைவில் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியாகவிருக்கின்றன.

படக்குழு:
ஒளிப்பதிவு: சந்தீப் சங்கரதாஸ், டி. ஷமீர் முகமத்
இசை: முரளி அப்பாதத், ஆரிப் அன்சார், சன்னி மாதவன்
படத்தொகுப்பு: வைசாக் ராஜன்

Latest articles

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான்...

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகிறது!

வால்வாட்சர் ஃபிலிம் நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர்...

More like this