HomeCinema'வல்லவன் வகுத்ததடா' படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் ஜிப்ரான்!

‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் ஜிப்ரான்!

Published on

ஹைப்பர்லிங்க் திரைக்கதையில் கிரைம் டிராமாவாக உருவாகியிருக்கும் ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் களத்தை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டனர்.

டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக அமைந்துள்ளது. இந்த டிரெய்லர் 5 கதாபாத்திரங்களின் பின்னணியை காட்டுவதுடன், பணத்திற்காக அவர்களின் உணர்ச்சிகரமான போராட்டத்தை பரபரப்பாகக் காட்டுகிறது. படபடக்கும் எடிட்டிங்  கட் , கதாபாத்திரங்களின் தவிப்பு, சிந்தனையைத் தூண்டும் வசனங்கள் என டிரெய்லர், இப்படம் மிக வித்தியாசமான களத்தில் ஒரு அருமையான திரை அனுபவம் தரும் என்பதை உறுதி செய்கிறது.

ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், பரபரப்பான திருப்பங்களுடன் உருவாகியுள்ளது இந்த படம். தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்‌ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஃபோகஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை படத்தைத் தயாரித்து, கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

பணம் தான் உலகின் மனித வாழ்வை தீர்மானிக்கிறது. பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையில் நடக்கும் போராட்த்தை பரபர திருப்பங்களுடன் சொல்கிறது இப்படம்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படக்குழு:
ஒளிப்பதிவு: கார்த்திக் நல்லமுத்து
இசை: சகிஷ்னா சேவியர்
எடிட்டர்: அஜய்
சண்டைக்காட்சி: மகேஷ் மேத்யூ
மக்கள் தொடர்பு: AIM சதீஷ், சிவா

Latest articles

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

More like this