HomeCinemaஷேன் நிகம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்' பட பூஜையில் இயக்குநர்கள் வஸந்த் சாய்,...

ஷேன் நிகம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ பட பூஜையில் இயக்குநர்கள் வஸந்த் சாய், பொன்ராம் பங்கேற்பு!

Published on

மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிக்க, ‘மெட்ராஸ்காரன்’ என தலைப்பிடப்பட்ட புதுமையான திரில்லர் திரைப்படம் எளிமையான பூஜையுடன் தொடங்கியது.

நிகழ்வில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நடிகை ஐஸ்வர்யா தத்தா, படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தயாரிப்பாளர் ஜகதீஷ், நடிகர் ஹமரேஷ், இயக்குநர்கள் வஸந்த் சாய், பொன்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக் குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

‘ரங்கோலி’ படம் மூலம் பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய இயக்குநர் வாலி மோகன்தாஸ், ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே மையக்கருவாக வைத்து. ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.

படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தை பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக எஸ் ஆர் புரொடக்சன்ஸ் பி.ஜகதீஸ் தயாரிக்கிறார்.

Latest articles

போலியோ முதல் HPV வரை: பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்!

தமிழ்நாடு முழுவதும் HPV தடுப்பூசி விழிப்புணர்வுக்கு பொது சுகாதாரத் துறை ஆதரவு; 2029 நூற்றாண்டுக்குள் 10 லட்சம் சிறுமிகளைப்...

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் 'அப்பா குட்டி.' ஆதரவற்ற குழந்தையை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

More like this