HomeCinemaஷாருக்கானின் ஜவான் படத்துக்கு மற்றுமொரு அங்கீகாரம்... ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் ஆஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே...

ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு மற்றுமொரு அங்கீகாரம்… ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் ஆஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படமாக சாதனை!

Published on

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தை, கௌரி கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

இந்த படம் 2024-ம் ஆண்டு ஆஸ்ட்ரா விருதுகளில், சிறந்த திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒரே திரைப்படம் இதுவென்பது, குறிப்பிடத்தக்கது.

உலகின் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பல சிறந்த படங்களான அனாடமி ஆஃப் எ ஃபால் (பிரான்ஸ்), கான்க்ரீட் உட்டோபியா (தென் கொரியா), ஃபாலன் லீவ்ஸ் (பின்லாந்து) ஃபெர்ஃபெக்ட் டேஸ் (ஜப்பான்), ரேடிகல் (மெக்சிகோ), சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (ஸ்பெயின்), தி டேஸ்ட் ஆஃப் திங்ஸ் (பிரான்ஸ்), தி டீச்சர்ஸ் லவுஞ்ச் (ஜெர்மனி) மற்றும் தி சோன் ஆஃப் இன்ரஸ்ட் (யுனைடெட் கிங்டம்) போன்ற மிகச்சிறந்த 500 படங்களில், கலந்துகொண்ட ஒரே இந்தியப்படம் ஜவான் ஆகும்.

ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா விருதுகளில் இயக்குநர் அட்லீ இந்தியா நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஜவான் படம் உலகளவில் பிரபலமான பார்பி, ஓப்பன்ஹைமர், கில்லர் ஆஃப் தி ஃப்ளவர் மூன், ஜான் விக், ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் மற்றும் பல பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் பட்டியலிலும் இணைந்துள்ளது.

ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் அஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this