HomeCinemaஅயோத்தி ராமர் கோவில் திறப்பு நாளில் ‘ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான்' படத்தின் போஸ்டர் வெளியீடு!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு நாளில் ‘ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான்’ படத்தின் போஸ்டர் வெளியீடு!

Published on

மொழித் தடைகளைத் தாண்டி எதிரொலிக்கும் மாறுபட்ட கதைகளை வழங்குவதில், பான் இந்தியா சினிமாவின் அர்ப்பணிப்புக்கு சான்றாக உருவாகவிருக்கும் படம் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் –  ஒரு சொல்லப்படாத காவியம்.’

பல மொழிகளில் இருந்து மதிப்புமிக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர், இது ஒரு மாறுபட்ட மற்றும் புகழ்மிகு ஒருங்கிணைப்பாக இருக்கும்.

இந்த படத்தின் படத்தின் புதுமையான போஸ்டர் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளில் வெளியாகியுள்ளது. கவர்ச்சிகரமான அந்த போஸ்டர், அயோத்தியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை எதிரொலிக்கும் வகையில், ரசிகர்களிடம் வரவேற்பை குவித்துள்ளது.  ‘ராமாயணத்தின் சொல்லப்படாத இதிகாசம்’ என்ற டேக்லைன், ராமாயணம் குறித்து இதுவரை ஆவணப்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டவிருப்பதை குறிக்கிறது.

கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், மதிப்புமிக்க ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு,  காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும்.

மலைகள், நெருப்பு, நீர் மற்றும் ராமர் மற்றும் அனுமன் தெய்வீக இரட்டையர் போன்ற கூறுகளைக் கொண்ட இந்த போஸ்டர்,  அயோத்தியில் இந்த மகிழ்ச்சியான தருணத்தின் சாரத்தை படம்பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது.  இயக்குநர் அவதூத் இயக்கும்   ‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ படம், அதிரடி மிகுந்த ஆக்சன் காட்சிகளுடன், காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை உயிர்பிக்கும்.

தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன.

கன்னடத்தில் பாராட்டுகளைக் குவித்த பிரபல தயாரிப்பாளர் K. A.சுரேஷ், சுரேஷ் ஆர்ட்ஸ் பேனரின் கீழ், இந்த லட்சியத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this