HomeCinemaஇந்த படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை; இஷ்டப்பட்டு வேலை செய்தோம்! -‘வட்டார வழக்கு' பட...

இந்த படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை; இஷ்டப்பட்டு வேலை செய்தோம்! -‘வட்டார வழக்கு’ பட நிகழ்வில் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் பேச்சு

Published on

‘டூலெட்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த சந்தோஷ் நம்பிராஜன், கதையம்சமுள்ள படங்களில் நடித்துவரும் ரவீனா ரவி நடிப்பில், கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கிய படம் ‘வட்டார வழக்கு.’ இந்த படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் பேசியபோது, ‘‘பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு இளையராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவர் படம் பார்த்து சம்மதித்து 12 நாட்கள் ஒரு தியானம் போல, பின்னணி இசையை செய்து கொடுத்தார். அதேபோல் நல்ல படம் என்பதால் படத்தில் நடித்தவர்கள், ஒளிப்பதிவாளர் என பலரும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர். பொருளாதாரத்தில் சில குறை நிறைகளோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதை மன்னித்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள்’ என்றார்.

நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், ‘‘இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது. இப்போதெல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகை ரவீனா ரவி, ‘‘நல்ல கதையம்சம் கொண்ட படம் இது. எல்லோரும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறோம். திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

படத்தை வெளியிடுகிற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ‘‘கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்களை விநியோகிப்பதில்தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. இந்த படமும் அப்படியான படம். மக்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this