HomeMovie Reviewஅப்பா குட்டி சினிமா விமர்சனம்

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

Published on

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் ‘அப்பா குட்டி.’

ஆதரவற்ற குழந்தையை தூக்கி வந்து சொந்த மகளாக அன்பு காட்டி வளர்த்து ஆளாக்கி வருகிறார் விஜய் ஆண்டனி. குழந்தை சிறுமிப் பருவத்தை எட்டிய நிலையில் அவளுக்கு உயிருக்கு ஆபத்தான வியாதி இருப்பது தெரிகிறது. சிறுமியைக் காப்பாற்ற வேண்டுமானால் அவளுடைய பெற்றோரை கண்டுபிடிக்க வேண்டும். அதுவே நிச்சயம் சவால்தான்.

அந்த பெற்றோருக்கு இன்னொரு பிள்ளை இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உடனடியாக அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

விஜய் ஆண்டனி பெரியளவில் சிரமப்பட்டு சிறுமியின் அப்பாவையும் அம்மாவையும் கண்டு பிடிக்கிறார். ஆனால், அவர்கள் சிறுமியின் உயியைக் காப்பாற்ற எதுவும் செய்ய முடியாத அளவிலான பிரச்சனைக்குள் சிக்கியிருக்கிறார்கள்.

இப்போது விஜய் ஆண்டனி அந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியில் இறங்குகிறார்.

அதற்கு பலன் கிடைத்ததா? சிறுமியைக் காப்பாற்ற முடிந்ததா? என்பதே மிச்சமீதிக் கதை…

பிச்சைக்காரனில் அம்மாவைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருந்ததுபோல் இதில் வளர்ப்பு மகளுக்காக எதையும் செய்யத் தயாராகிற விஜய் ஆண்டனி. அடிபடுவது, மிதிபடுவது, அவமானப்படுவது என எல்லாமும் நடக்கிறது. நீதி மன்றத்திலும் போராட வேண்டிய சூழ்நிலை. அதெல்லாம் மகளுக்காக என்றால், காதலித்த பெண்ணை மணக்க முடியாமல் போகிற பரிதாப நிலைக்கும் ஆளாகிறார். நடிப்பு நெகிழ வைக்கிறது.

விஜய் ஆண்டனியின் நல்ல குணங்களால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்து, காதலனின் கஷ்ட நஷ்டங்களில் துணை நிற்கிற காட்சிகள் பிரித்தி அஸ்ராணியின் நடிப்பு எளிமையாக இருக்கிறது.

சிறுமி லிதன்யா, பக்ஸ் பகவதி பெருமாள், அருவி மதன், பிரவீனா உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் கதையின் கனம் உணர்ந்து நடித்திருக்க, முருகானந்தத்தின் டயலாக் டெலிவரி கலகலப்புக்கு கேரணடி.

கதைக்கு பொருத்தமான வரிகளில் அமைந்த ‘நீதான் என் கண்ணாடி’, ‘அப்பாவ போல’ பாடல்கள் விஜய் ஆண்டனியின் இசையில் இதமூட்டுகின்றன. பின்னணி இசையில் உயிரோட்டம் குறைவு. ஒளிப்பதிவு நிறைவு.

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் என்பதை மையமாக வைத்துக் கொண்டு மனிதர்கள் எந்தளவுக்கு மோசமானவர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர் மு மாறன்.

Rating 3 / 5

Latest articles

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்! -‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப்...

தயாரிப்பாளர் கண்ணன் ரவி உள்ளிட்ட பிரபலங்களின் பங்கேற்போடு உற்சாகமாக நடந்த ‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழா! 

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில்...

More like this